பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்
சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்
பெண்களுக்காக
தனுஷை புகழும் Tamanna!
இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், தனுஷ் பிறந்த நாள் கொண்டாடியபோது நான் சென்னையில் இருந்தேன். எனவே விருந்துக்கு போனேன். வேங்கை படத்தில் இருந்து நானும் தனுசும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். தனுஷ் அற்புதமான சிறந்த மனிதர். அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் என்னால் பங்கேற்காமல் இருக்க முடியாது. இருவரும் நிறைய விஷயங்கள் பற்றி பேசினோம், என்று கூறியுள்ளார்.
முகப்பொலிவிற்கு உதவும் Carrot!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தைக் காக்க வேண்டியுள்ளது. நம் சருமத்தை செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் நம் வீட்டில் இருக்கும் கரட்டை பயன்படுத்தி பாதுகாக்கலாம். கரட் நம் உடலுக்கு மட்டும் உகந்தது அல்ல, நம் சருமத்திற்கும் மிகவும் சிறந்தது.
செய்யும் முறை
2 கரட்டை வேக வைத்து மசித்துக்கொள்ளவும். மசித்த கரட்டுடன் 1 ஸ்பூன் ஒலிவ் ஒயில், 1/2 ஸ்பூன் தேன் , லெமன் ஜூஸ் கலந்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடன் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இதனால் முகமானது பொலிவுடன் அழகாகக் காணப்படும்.இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் உங்கள் முகம் படிப்படியாக பொலிவடைவதை பார்க்கலாம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் Ivy gourd!

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. கொஞ்சம் நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம்செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியது தான் கோவைக்காய். கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொறியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்து கொள்வதுண்டு.
இதனை வாரம் 2 நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப் புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்ககரை அளவைக் கட்டுப்படுத்தும். ஆனால் நிறைய பேர் பாகற்காயை ஒதுக்குவது போல் கோவைக் காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள்.நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளும் விருப்பமுடையதாகத் தான் ஆகும். இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம்.
பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும்வயிற்றுப் புண் இருப்பவர்கள் வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம். கோவைக்காயை பீன்ஸ் போல பொறியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
கண் இமைகளை அழகாக்கும் Saffron!

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.இந்த கலவையை தினமும் பூசி வர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.
நட்சத்திர விடுதியா? சிறைச்சாலையா? (Photo இணைப்பு)
நோர்வேயிலுள்ள நட்சத்திர விடுதி போன்று அமைக்கப்பட்ட சிறைச்சாலையின் புகைப்படங்கள் இணைப்பு.
நாய்க்குட்டியை சுமந்து செல்லும் ஆமை! (Video இணைப்பு)
ஆமையின் முதுகின் மீது ஏறி ஆனந்தமாக பயணிக்கும் நாய்க்குட்டி.
புற்றுநோய்க் கட்டிகளை அழிக்கும் Carrot!

கரட் சாப்பிடுவதால் எம்முடைய உடலில் புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் உருவாகிறது என்பது தெரிந்த செய்திதான். ஆனால் கரட்டில் உள்ள எந்த பகுதி புற்றுநோய் கட்டிகளை அழிக்கிறது என்பது இப்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்திலும், டென்மார்க்கிலும் உள்ள நியூகாஸில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதுபற்றிய ஆராய்ச்சிகளை எலிகளைக் கொண்டு செய்துவருகிறார்கள். எலிகளில் காணப்படும் புற்றுநோய்க்கட்டிகள் மூன்றில் ஒருபங்காக குறைவது எதனால் என்பதற்கான விடை இப்போது கிடைத்திருக்கிறது.
கரட்களை சேமிக்கும்போது வேர்ப்பகுதிகளில் கறுப்பு நிற புள்ளிகள் தோன்றி அழுகல் தொடங்கி விடுகிறது. இந்த நோய்க்கு liquorice rot என்று பெயர். இந்த நோயை ஒழிக்க Falcarinol எனப்படும் இயற்கையான பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பூச்சிக்கொல்லிக்கு புற்றுநோய்க்கட்டிகள் வளர்ச்சியடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.இந்த ஆய்வில் புற்றுநோய்க் கட்டிகளுடன் கூடிய 24 எலிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த எலிகளை மூன்று குழுக்களாக பிரித்துக் கொண்டனர். முதல் குழுவிற்கு நமக்கு நன்றாகத் தெரிந்த ஆரஞ்சுநிற காரட்டுகள் பதினெட்டு வாரங்களுக்கு உண்ணக் கொடுக்கப்பட்டன. மற்றொரு குழுவிற்கு falcarinol தேவையான அளவில் சேர்க்கப்பட்ட காரட்டுகள் கொடுக்கப்பட்டன. மூன்றாவது குழுவிற்கு falcarinol ன் அளவு அதிகரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டது. மூன்றாவது குழுவில் புற்றுநோய்க்கட்டிகள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது அறியப்பட்டது.
நியூகாஸில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டொக்டர் கிர்ஸ்டன் ப்ராண்ட் என்பவர் இந்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். புற்றுநோய்க்கட்டிகளை கட்டுப்படுத்த எவ்வளவு தேவை என்பதை துல்லியமாக கண்டறிய இந்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக டாக்டர் ப்ராண்ட் கூறுகிறார். மேலும் காய்கறிகளைப் பயிரிடும்போதே மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டுவருகின்றன.
பச்சைக்கரட், சமைக்கப்பட்ட கரட், கரட்சாறு இவற்றை உணவில் சேர்க்கும்போது அவை புற்றுநோய்க்கட்டிகளில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் ஆய்வுகள் தொடருகின்றன.Falcarinolன் அளவு அதிகரிக்கும்போது நச்சுத்தன்மையை விளைவிக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால் ஒரே சமயத்தில் 400 கிலோ கரட்டை சாப்பிடுவதால் மட்டுமே ஆபத்தான அளவிற்கு நச்சுத்தன்மையை உண்டாக்கப்படுமாம். Falcarinol என்னும் நச்சு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலை உடலுக்குள் தூண்டிவிடுகிறது என்பதுமட்டுமே இதுவரையிலான கண்டுபிடிப்பு.
Simbu உடன் மீண்டும் சேர்ந்த Nayan!
நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு-நயன்தாரா ஒருவரையொருவர் மனம்விட்டு பேசியுள்ளனர். முடிவில் அவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர். நயன்தாராவுடன் ஏற்பட்ட இந்த சந்திப்பு குறித்து சிம்பு கூறுகையில் நயன்தாரா, ஒரு நல்ல ஆத்மா. நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம். எங்களுக்குள் மீண்டும் காதல் துளிர்த்திருக்கிறது என்று சொல்வது முட்டாள்தனமானது.நாங்கள் ஒரே தொழிலில் இருப்பதால் எங்களுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறோம். மேலும் சினிமா சம்பந்தமான விழாக்களில் பார்த்து பேசுவதோடு அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். நயன்தாரா அவரது வேலையை சிறப்பாக செய்கிறார். அவர் நலமுடன் இருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
இந்த சந்திப்பின் போது சிம்பு-நயன்தாரா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விடயம், இதற்கு முன்பு சிம்பு-நயன்தாராவுடைய காதல் பிரிவுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியானதே. அப்படியிருக்கையில் காதல் பிரிவிற்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டதானது, யாரோ ஒருவரை வெறுப்பேற்ற இருக்கலாம் என்று தெரிகிறது.
Ananya இரகசிய திருமணம்!

நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனன்யா. இவருக்கும், கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயலுக்கும் பிப்ரவரி 3ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த நிச்சயதார்த்தத்திற்குப் பிறகுதான் ஆஞ்சநேயலு ஏற்கனவே திருமணமானவர் என தெரியவந்தது.
இதனால் இருவருக்கும் நடக்கவிருந்த திருமணம் ரத்தானது. இதனையடுத்து நடிகை அனன்யா மீண்டும் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இந்நிலையில் தன்னுடைய மகள் அனன்யா வீட்டை விட்டு வெளியேறி ஆஞ்சநேயலுவுடன் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக அனன்யாவில் தந்தை கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். என் மகளுக்கு ஆஞ்சநேயலு பொருத்தமானவரில்லை. அனன்யா எங்களுக்கு துரோகம் செய்துவிட்டார் எனவும் கூறினார்.
"வரும் ஆனா வராது" Kannaiyah காலமானார்!

பழம்பெரும் நடிகர் "என்னத்த' கண்ணையா (87) உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.சென்னை, லொயிட்ஸ் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை அவர் உயிரிழந்தார்.எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, தனுஷ், விஷால் உள்பட தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள இவர், 1924-ல் மதுரையில் பிறந்தார்.
70 வருட கலைப் பயணம்: டி.கே.சண்முகம், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோரது நாடகக் குழுக்களில் இணைந்து 1942-ல் கலைப் பயணத்தைத் தொடங்கிய கண்ணையா, 1950-ல் "ஏழை படும்பாடு' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார்.ரவிச்சந்திரன், ஜெயலலிதா நடித்த "நான்' திரைப்படத்தில் கண்ணையா பேசிய "என்னத்த' என்ற வசனம் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதன் பிறகே அவர் "என்னத்த' கண்ணையா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர். உடன் "ஒளிவிளக்கு', "கண்ணன் என் காதலன்', "பாசம்' உள்ளிட்ட படங்களிலும், சிவாஜியுடன் "சொர்க்கம்', "வீரபாண்டியன்', "மருமகள்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ரஜினியுடன் "ஊர்க்காவலன்', "மன்னன்', "சிவா' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.குணச்சித்திர வேடம், நகைச்சுவை வேடம் என பல கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த கண்ணையா, பி.வாசு இயக்கத்தில் "தொட்டால் பூ மலரும்' என்ற திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த "வரும்.... ஆனால் வராது.....' என்ற நகைச்சுவை காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.
தனுஷ் உடன் "படிக்காதவன்', அருண் விஜய் உடன் "தவம்' உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், இறுதியாக விஷாலுடன் "வெடி' திரைப்படத்தில் நடித்தார்.மறைந்த கண்ணையாவுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். அவரது மனைவி ராஜம் 4 ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார்.கண்ணையாவின் இறுதிச் சடங்கு புதன்கிழமை மாலை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மின்மயானத்தில் நடைபெற உள்ளது.
கோப்புகளை இலவசமாக சேமிக்க உதவும் Sky Drive!

இணையத்தில் நமது கோப்புகளை இலவசமாக சேமித்து வைக்க இன்னுமொரு இலவச சேவை உள்ளது. அதுதான் SKY DRIVE. இது MICROSOFT நிறுவனத்தால் 25 GB கொள்ளவுடைய இடமாக இலவசமாக வழங்கப்படுகிறது.இச் சேவையினைப் பெற நாம் முதலில் WINDOWS LIVE ID ஒன்றைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ் SKY DRIVE STORAGE எமது MY COMPUTER இல் ஒரு DRIVE ஆக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கு இந்த SKYDRIVE EXPLORER எனும் இவ் மென்பொருள் எமக்கு உதவுகிறது. இதை நிறுவியவுடன் MY COMPUTER இல் SKY DRIVE ஒரு DRIVE காட்டும். இதனை OPEN செய்தவுடன் WINDOWS LIVE SIGN IN WINDOW ஒன்று தோன்றும். அதில் விண்டோஸ் LIVE ID ஐயும் PASSWORD ஐயும் கொடுத்து LOG IN செய்து முக்கியமான ஆவணங்கள் மற்றும் கோப்புகளை SKY DRIVE இல் இலகுவாக சேமித்துக் கொள்ளலாம்.
SKY DRIVE இலவச சேவையை பெற இங்கே அழுத்தவும்.
SKYDRIVE EXPLORER ஐ தரவிறக்க இங்கே அழுத்தவும்.
Naan Ee - Nani,Samantha! (Watch Naan Ee Tamil Movie Online)

தெலுங்கில் இதுவரை தான் இயக்கிய அத்தனை படங்களையும் ஹிட் படமாக்கிய டோலிவுட் முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் முதல் நேரடித் தமிழ் படம் தான் "நான் ஈ"! இது இயக்குநரின் முதல் தமிழ்படம் மட்டுமல்ல.ஹொலிவுட்டுக்கே சவால் விடும் முத்தாய்ப்பான படமும் கூட! கதைப்படி, நாயகர் நானி(படத்தில் இவரது பாத்திரத்தின் பெயரும் இதேதான்.) கதாநாயகி சமந்தாவை உருகி உருகி காதலிக்கும், சமந்தாவின் எதிர்வீட்டு இளைஞர்!நாயகி சமந்தாவுக்கும் நானி மீது காதல் உண்டென்றாலும் அதை வெளிப்படையாக காட்டாமல் நானியை இரண்டாண்டுகளாக கலாய்த்து வருகிறார். அரிசி, கோதுமை, தீக்குச்சி, பென்சில்முனை உள்ளிட்ட சின்ன சின்ன தானியங்கள், பொருட்களில் எல்லாம் சிற்பங்கள் செதுக்கி அவற்றின் மூலம் உலகளவில் விருதுகளை பெறும் குறிக்கோளை உடைய சமந்தாவிற்கு தன் நண்பர்கள் உதவியுடன் தான் நடத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவிபுரிந்து உறுதுணையாக இருக்கும் பழக்கமும் உண்டு! இந்நிலையில் சமந்தாவின் தொண்டு நிறுவனத்திற்கு உதவி புரியும் சாக்கில் சமந்தாவை அடைய திட்டம் தீட்டுகிறார் பெரும் கோடீஸ்வரரும், தொழில்அதிபருமான வில்லன் சுதீப்! அப்புறம்? அப்புறமென்ன...? வில்லன் சுதீப்பின் திட்டத்திற்கு தடையாக திரியும், தெரியும் நாயகர் நானியை தன் ஆட்கள் மூலம் கடத்தி வந்து காலாலேயே மிதித்து கொள்கிறார் சுதீப். அதன்பிறகு "ஈ"-யாக மறுபிறவி எடுக்கும் நானி, வில்லன் சுதீப்பை சமந்தா உதவியுடன் போட்டு தள்ளுவது தான் "நான் ஈ" படத்தின் கரு, கதை, களம், எக்ஸ்ட்ரா, எக்ஸ்ட்ரா... எல்லாம்!
கரண்ட் கட் ஆன தன் காதலி சமந்தா வீட்டுக்கு மொட்டை மாடி டிஷ்-ஆண்டனாவில் சில்வர் பேப்பர்களை பரப்பி அதில் டார்ச் அடித்து அதன் மூலம் ஒளி வெள்ளத்தை பாய்ச்சுவதில் ஆரம்பிக்கும் நானியின் ஹீரோயிசம், படத்தில் நானி இறந்து ஈ ஆன பின்பும் செய்யும் சாகசங்களை நம்ப வைக்க சரியான காரணியாகிவிடுகிறது. இது மாதிரி விஷயங்கள் தான் ஹீரோ இறந்து "ஈ" யாகிவிட்டார் "ச்சீ" என்று எண்ணத்தூண்டாமல் நம்மை ஒரு "ஈ"-யை ஹீரோவாக ரசிக்க வைக்கிறது என்றால் மிகையல்ல!
சமந்தாவை உள்நோக்கத்துடன் சுதீப் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து வந்து விருந்து கொடுப்பது, அந்த விருந்தில் சமந்தாவின் கவனம் முழுவதும் அங்கு யதேச்சையாக வரும் நானியின் மீதே இருப்பது, அதனால் வில்லன் விஸ்வரூபம் எடுப்பது, நாயகர் நானியை கொல்வது, நானி "ஈ"-யாக மறுபிறவி எடுத்து வில்லன் சுதீப்பை தூங்க விடாமல் சித்ரவதை செய்வது, சுதீப்பின் காரை கவிழ்த்துவிட்டு உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என எச்சரிக்கை வாசகம் எழுதுவது, ஈ, எறும்பு கூட நுழைய முடியாத அளவிற்கு வில்லன் சுதீப் தன் வீட்டை பாதுகாப்பு செய்து பலப்படுத்துவது, சமந்தா உதவியுடன் "ஈ" அந்த பாதுகாப்பையும் மீறி சுதீப் வீட்டிற்குள் போய் அவருக்கு தொடர் தொந்தரவு தருவது என படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி. லாஜிக் பார்க்க வேண்டிய கதைகளிலேயே லாஜிக் இல்லாமல் காட்சிகளை பதிவு செய்யும் நம்மூர் முன்னணி, பின்னணி, நடுஅணி(?) இயக்குநர்களுக்கு மத்தியில் புனர் ஜென்மம், மறுபிறவி, ஈ - ரிவெஞ்ச்... என்று லாஜிக் இல்லாத கதையில், சீன் பை சீன் லாஜிக் மீறாமல் படத்தின் காட்சிகளை லாஜிக், மேஜிக்காக இயக்கி இருக்கும் இயக்குநர் ராஜ மெளலி இஸ் கிரேட்! கங்கிராட்ஸ்!! கீப் இட் அப்...!!!
தமிழ்-தெலுங்கு இரண்டு மொழிகளிலும் பிரம்மாண்டமான அறிவியல் திகில் படமாக நான் ஈ-யை உருவாக்கியிருக்கும் இயக்குநர் எதிர்பார்த்ததை அப்படியே தந்திருக்கின்றனர் நாயகர் நானி, நாயகி சமந்தா, வில்லன் சுதீப், தேவதர்ஷினி மற்றும் சந்தானம் உள்ளிட்ட சகலரும். அதிலும் சுதீப், ரகுவரன், பிரகாஷ்ராஜ், கிஷோர் உள்ளிட்ட அத்தனை வித்தியாசமான வில்லன்களையும் கலந்து செய்த கலவையாக படம் முழுக்க கலக்கி இருக்கிறார்.மரகதமணியின் பின்னணி இசை, கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் ஸ்பெஷல் எபெக்ட்ஸ், கிராபிக்ஸ், மிரட்டல்களும் கலந்துகட்டி படத்தை பிரமாண்டபடுத்தியிருக்கின்றன. அதிலும் நானியின் உடலில் இருந்து ஈ முட்டைக்குள் அவரது ஆன்மா அடைக்கலமாகி, மீண்டும் உயிர் பெற்று வரும் காட்சிகள் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் கலக்கல் காட்சிகள்!ஆக மொத்தத்தில் "நான் ஈ", இந்த "ஈ"-யை மற்ற தமிழ் சினிமாக்கள் பலவற்றைமாதிரி ஓட்ட வேண்டியதில்லை, வெற்றிகரமாக ஓடிவிடும்.
நன்றி :- தினமலர்
கூந்தல் செழிப்பாக வளர உதவும் முருங்கைக்கீரை சூப்!

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:
தேவையானவை
முருங்கைகீரை - 2 கப்
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
வெண்ணெய் 1 - டீ ஸ்பூன்
கார்ன் ஃப்ளோர் - 1 டீ ஸ்பூன்
உப்புத்தூள், மிளகுத்தூள் - சிறிதளவு
முதலில் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்ணீரில் இறங்கி இருக்கும்.அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். திக்காக வேண்டும் என்று நினைப்பவர்கள் கோர்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.(வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.
Ulcer இருப்பவர்கள் கவனிக்க வேண்டியவை!

அல்சர் வயிற்றில் இருக்கும் இரைப்பையில் புண்களை ஏற்படுத்தும். மேலும் எப்பொழுது வயிற்றில் இருக்கும் பாதுகாப்பைத் தரும் ஒரு உறையானது சரியாக வேலை செய்யாமல் இருக்கிறதோ, அப்போது வயிற்றில் வீக்கம் அல்லது புண் போன்றவை ஏற்படும். அத்தகைய அல்சர் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட போது, அந்த ஆய்வில் அல்சர் இருந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்கள் அல்சர் உருவாதற்கு முக்கிய காரணம் இரைப்பையில் பாக்டீரியாவான ஹெலிகோபேக்டர் பைலோரி (helicobacter pylori) தாக்குவதால் வருகிறது. அல்சரை உருவாக்கும் இந்த பாக்டீரியா, கார்சினோமாவுடன்தொடர்புடையது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பாக்டீரியா எளிதில் உடலை தாக்கி அல்சரை உண்டாக்கும் தன்மையையும் உடையது. அதுமட்டுமல்லாமல் டி.என்.ஏ-வில் மாறுபாட்டை ஏற்படுத்துவதோடு, வயிற்றில் இருக்கும் பாதுகாப்பு உறையையும் பாதிப்பை எற்படுத்திவிடும். இதனை எளிதில் சரிசெய்துவிட முடியாது. நீண்ட நாட்கள் வயிற்றில் புண்கள் இருந்தால், அவை வயிற்று புற்றுநோயை உண்டாக்கிவிடும். ஏனெனில் அவ்வாறு பாதிக்கப்பட்ட வயிற்று திசுக்கள் நீண்ட நாட்கள் இருப்பதால், இயற்கையாக அவை ஃபைபரஸ் திசுக்களாக மாற்றப்படுகின்றது. இதனால் நாளடைவில் வயிற்று புற்றுநோயானது ஏற்பட்டுவிடும்.
ஆகவே அல்சர் இருப்பவர்கள் ஆஸ்பிரின் அல்லது மற்ற அழற்சி மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தினால் வயிற்றில் உற்பத்தியாகும் பாதுகாப்பான கோழையானது குறைந்துவிடும். மேலும் அந்த மருந்துகள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தின் அளவை அதிகரித்து. வயிற்றுக்கு செல்லும் இரத்தத்தின் அளவை குறைத்து, உடலின் திறனை பலவீனப்படுத்தும் செல்களை சரி செய்யாமல் இருக்கும். இத்தகைய காரணங்களால் புற்றுநோய் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றும் கூறுகின்றனர்.
தவிர்க்க வேண்டியவை
மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் பாக்கு போடுதல் போன்றவை அனைத்தையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அல்சரிலிருந்து, வயிற்று புற்றுநோய்க்கு வழிவகுக்கும். மேலும் அவை வயிற்றில் அதிகமான அளவு அமிலத்தை உற்பத்தி செய்யும். ஆகவே வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்பட்டால், உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் வயிற்று புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும். மேலும் அல்சர் ஏற்பட்டால் கடைகளில் அதற்கான மருந்துகளை வாங்கி சாப்பிட்டு சரிசெய்யலாம். இதனால் புற்றுநோய் அளவுக்கு கொண்டு போகாமல் தடுக்கும்.
அல்சரானது சரிசெய்யக் கூடிய ஒன்றே. அதிலும் வயிற்று புற்றுநோய் ஆரம்பத்தில் இருந்தால் கூட சரிசெய்துவிட முடியும். ஆனால் எதற்கு அந்த அளவு வரை நாம் இருக்க வேண்டும். அதற்கு முன்னதாகவே மருத்துவரை ஆலோசித்து சரியான மருந்துகளை உட்கொண்டு, அல்சரை தடுக்கலாம்.
லண்டனில் Olympic இன்று ஆரம்பம்!

ஏ.ஆர். ரகுமான், ரிக்ஸ்மித் கர்ல்ஹைடே உள்ளிட்ட புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.ஒலிம்பிக் ஜோதி ஏற்றி வைக்கப்பட்ட பின்னர் போட்டிகளை ராணி எலிசபெத், இளவரசர் பிலிப் முறைப்படி தொடங்கி வைக்கின்றனர்.தொடர்ந்து ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு நடைபெறும்.ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ள வீரர் தங்களது நாட்டு கொடியை ஏந்தி வருவார்.
தொடக்கவிழா நடைபெறும் மைதானத்தில் சுமார் 80 ஆயிரம் பேர் அமரலாம். ஒலிம்பிக் போட்டி பாதுகாப்புக்காக 12 ஆயிரம் பொலிசார் நகர் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.இதுதவிர 7500 இராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர்.மேலும் 5 ஆயிரம் அதிரடிப்படை வீரர்கள், வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் 1000 நிபுணர்கள், இதுதவிர 13 ஆயிரம் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள், 3000 சமூக ஆர்வலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஒலிம்பிக் போட்டிகளுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளதால் வான்வெளியில் எப்போதும் சுற்றிவரும் வகையில் ரோந்து விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதுதவிர கடல்வழி பாதுகாப்பும் பலபடுத்தப்பட்டுள்ளது.ஆயுதங்கள் தாங்கிய கப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.லண்டன் நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு தொடக்கவிழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. தொடக்க நாளில் வில்வித்தை போட்டிகள் மட்டும் நடக்கிறது. மற்ற போட்டிகள் 28ஆம் திகதி தொடங்குகின்றன.
தொழிநுட்பத்தில் China முன்னேற்றம்:Lenovo முதலிடத்தில்!
.jpg)
விற்பனை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கணனி உற்பத்தியாளர் என்ற பெயரை லெனோவோ நிறுவனம் இவ்வருடம் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.தற்போது முதலிடத்தில் உள்ள எச்.பி. நிறுவனம் தனது இடத்தினை இழக்குமெனத் தெரிவிக்கப்படுகின்றது.தொழில்நுட்பத்துறையில் சீன நிறுவனமொன்று இவ்வாறு முதலிடத்தினை பிடிக்கவுள்ளமை இதுவே முதல் முறையெனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
சீனா தொழில்நுட்பத்துறையில் வேகமாக முன்னேறுவதனையே இது காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சீனாவின் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிடல், வெளிநாட்டு நிறுவனங்களைக் கையகப்படுத்தல், வேகமாக வளர்ச்சியடைந்து வரும் உள்நாட்டு சந்தை ஆகியவனவே இதற்கான காரணங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது.கடந்த வருடத்தின் 3 ஆம் காலாண்டுப்பகுதியிலேயே லெனோவோ நிறுவனம் உலகின் 2 ஆவது மிகப்பெரிய கணனித்தயாரிப்பு நிறுவனமாக முன்னேறியது.
இவ்வருடத்தின் ஏப்ரல் மற்றும் ஜூன் காலப்பகுதிகளில் லெனோவோ நிறுவனம் கணனிச்சந்தையில் 14.9 வீதத்தினைக் கொண்டிருந்தது.இது எச்.பி நிறுவனத்தின் 15.5 வீதத்தினை விட வெறும் 0.6 வீதமே குறைவானதாகும்.தற்போதைய புள்ளிவிபரங்களின் படி அவ் இடைவெளி 0.2 வீதங்களாகக் குறைந்துள்ளதாகவும் இதனால் உலகின் மிகப்பெரிய கணனி தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெறுவதற்கு இன்னும் சில மாதங்களே தேவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சீனாவில் ஹுவாயி நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரைப் பெறவுள்ளது.அத்துறையில் முதலிடத்திலிருக்கும் சுவீடன் நாட்டு எரிக்ஸன் நிறுவனத்தினை ஹுவாயி கூடிய விரைவில் முந்தவுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
Windows 8 ஒக்டோபரில் வெளியீடு:Microsoft அறிவிப்பு!
.jpg)
விண்டோஸ் 8 இயங்குதளமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.விண்டோஸ் 8 இயங்குதளமானது விற்பனையில் சாதனை புரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.மைக்ரோசொப்டின் வரலாற்றில் அதன் மற்றைய இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய மாறுதல்களுடன் வெளியாகும் இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது.
புரட்சிகரமான மெட்ரோ யு.ஐ இனைக் கொண்டதுடன், புதுமையான பல வசதிகளையும் கொண்டுள்ளது.இதன் பீட்டா தொகுப்பு ஏற்கனவே வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.தனது இறுதி வெளியீடான விண்டோஸ் 7 ஐ விட 8 ,பல மடங்கு திறன் வாய்ந்தது என மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.
டெஸ்க்டொப் கணனிகள் மட்டுமன்றி டெப்லட், லெப்டொப் ஆகியவை இயங்கும் வகையிலேயே விண்டோஸ் 8 உருவாக்கப்பட்டுள்ளது.குறிப்பாக தொடுதிரைகளைக் கொண்ட சாதனங்களுக்கு இது இன்னும் சிறப்பாக செயற்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.
விசித்திரமான குகை Australia வில் கண்டுபிடிப்பு! (பட இணைப்பு)

குகைகள் தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் விசித்திரமானதும் பார்ப்பவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளனர்.கிழக்கு அவுஸ்திரேலியாவில் அமைந்துள்ள குகைகளிலேயே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
காலநிலை மாற்றம் மற்றும் குகைகளுக்கிடையிலான தொடர்பு என்பவை தொடர்பில் தற்போது ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுவருகின்றனர்.அவ்வாறானதொரு ஆராய்ச்சியின் போதே இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.பார்ப்பவர்களை வியக்கவைக்கும் அப்புகைப்படங்களை நீங்களும் கண்டு இரசியுங்கள்.






Facebook மீதான தடையில் தளர்வு:Iran அறிவிப்பு!

இதற்காக அந்நாட்டு பொலிஸார் பேஸ்புக்குடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் ஈரானியர்களால் பேஸ்புக்கில் உருவாக்கப்பட்டுள்ள பாலியல் மற்றும் விபச்சாரம் தொடர்பான பக்கங்களை அகற்றும் நடவடிக்கையையும் ஈரான் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது.
ஈரானில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பேஸ்புக் மீது தடை ஏற்படுத்தப்பட்டது. தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியில் அங்கு ஏற்பட்ட அமைதியின்மைக்கு பேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணையத்தளங்கள் பங்களிப்புச் செய்ததாக குற்றஞ்சாட்டியே ஈரான் பேஸ்புக் மீது தடை விதித்தது.
ஈரானிய சமூக ஆர்வலர்கள் பேஸ்புக்கினைப் பயன்படுத்தியே ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குசெய்தமை குறிப்பிடத்தக்கது.
Naan "E" திரைப்படத்தை பாராட்டிய Ajith!

நான் ஈ படத்தினை நடிகர் அஜித் பாராட்டியுள்ளார். நானி, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நான் ஈ படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. தென்னிந்திய திரையுலகினர் அனைவரும் படத்தை பார்த்துவிட்டு, இயக்குனரை தொலைபேசியில் அழைத்து புகழ்ந்து தள்ளுகின்றனராம். நடிகர்களில் ரஜினிகாந்த், வெங்கடேஷ், நாகர்ஜூனா, சித்தார்த், மகேஷ், பிரபாஸ், ரவிதேஜா, ராணா, விக்ரம், கார்த்தி, தனுஷ் ஆகியோரும் இயக்குனர்களில் ராம்கோபால் வர்மா, ஷங்கர், லிங்குசாமி ஆகியோரும் படத்தை பார்த்துவிட்டு ராஜமௌலியை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் தற்போது அஜித்தும் சேர்ந்திருக்கிறார். நான் ஈ படத்தை பார்த்த அஜித் ராஜமௌலியை போனில் தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளிவிட்டாரம். இந்நிலையில் விரைவில் ராஜமௌலி நேரடி தமிழ்படம் இயக்குவார் என தமிழ் சினிமா வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லெறி வாங்கிய நடிகை Sarah!

முன்னாள் இந்திய அழகியும், நடிகையுமான சாரா ஜேன் தியாஸ் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி தாக்கினார். இதில் அவரது உதடு கிழிந்தது. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை சாரா ஜேன் தியாஸ், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். ஏக்தா கபூர் தயாரித்துள்ள கியா சூப்பர் கூல் ஹைய் ஹம் என்ற இந்திப்படத்தில் சாரா காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரித்தேஷ் தேஷ்முக், துஷார் கபூர் மற்றும் நேகா சர்மா ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 27ம்தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் அறிமுக விழா அரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்றது. அப்போது சாரா, சக நடிகைகளுடன் விழா மேடையில் அமர்ந்திருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூட்டத்திலிருந்து கல் வீசினார். இது சாராவின் உதட்டில் பட்டு உதடு கிழிந்தது. இதனை தனது ட்விட்டர் தளத்தில் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார் சாரா.
பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாதவர் Ajith:Rajasekar!
.jpg)
சினிமாவில் அஜித் நுழைந்தபோது எப்படி இருந்தாரோ, அதேப்போல இப்போதும் மாறாமல், பெரிய நடிகர் என்ற பந்தாவும் இல்லாமல் இருக்கிறார் என்று பில்லா-2 ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறியுள்ளார். அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா உள்ளிட்ட பலரது நடிப்பில், சக்ரி டோல்டி இயக்கத்தில், ஒய்டு ஆங்கிள் மற்றும் ஐ.என்.இ இணைந்து தயாரித்து பிரமாண்டமாய் உருவாகி இருக்கும் படம் பில்லா-2. இப்படம் ஜூலை 13ம் தேதி முதல் உலகம் முழுக்க ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதன்பின்னர் தினமலருக்கு பேட்டியளித்த இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூறியதாவது, பில்லா-2 படத்தில் ஒளிப்பதிவு செய்தது ரொம்ப சவாலாக இருந்தது. எல்லா மனிதனும் கொள்ளைக்காரனாக பிறப்பதில்லை. அதுபோலத்தான் பில்லா-2விலும் அஜித் சாதாரண மனிதனாக இருந்தவர் எப்படி பில்லாவாக மாற்றப்பட்டார். அதற்கான சூழ்நிலை அமைந்தது எப்படி என்பதே இப்படத்தின் மையக்கரு. அதை ரொம்ப அழகாகவும், அருமையாகவும் படமாக்கியுள்ளோம்.
ஆசியாவிலேயே முதன்முறையாக இந்தபடத்தில் தான் எபிக் எனும் 5கே ரெசல்யூசன் காமிராவை பயன்படுத்தியுள்ளோம். இதற்காக தென் ஆப்ரிக்காவில் இருந்த பிரத்யேகமான லென்ஸ் வரவழைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. பில்லா-2வின் பெரும்பகுதியை ஐதரபாத், கோவா, மும்பை மற்றும் ஜார்ஜியாவில் படமாக்கினோம். அதிலும் ஜார்ஜியாவில் மைனஸ் 10 டிகிரி குளிரில் படம் பிடித்தது ரொம்ப சவாலாக அமைந்தது. பில்லா-2வில் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் ஒரு நல்ல அனுபவம். சினிமாவிற்கு வந்தபோது அவர் எப்படி இருந்தாரோ அதுபோல இப்பவும் இருக்கிறார். கதைக்கு எது தேவை, எப்படி நடிக்க வேண்டும், எந்தமாதிரி டிரஸ் போடவேண்டும் என்று படக்குழுவில் யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொண்டு நடிப்பவர். ஒரு பெரிய ஹீரோ என்ற பந்தாவே அவரிடம் கிடையாது என்று கூறியுள்ளார்.
Facebook,Twitter இல் தனது பெயரில் மோசடி; Tamanna புலம்பல்!
.jpg)
சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை ஆண்,பெண் வித்தியாசம் இன்றி பேஸ்புக்,டுவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதில் பல மோசடிகள் நடந்து வருவதாக தினமும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கிறது.குறிப்பாக நடிகைகளின் பெயரிலேயே அதிகளவு மோசடிகள் நடக்கின்றன.நடிகைகளின் படங்கள் மற்றும் செய்திகளை அவற்றில் போட்டு வைத்து ரசிகர்களுடன் தொடர்பு வைத்துள்ளனர்.ஏற்கனவே நயன்தாரா,திரிஷா,ஸ்ரேயா போன்றோர் பெயர்களில் இதுபோல மோசடிகள் நடந்துள்ளதாக போலீசிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் தமன்னா.இவரது பெயரிலும் பேஸ்புக், டுவிட்டரில் மோசடி நடக்கிறது.அவர் நடிக்கும் பட விவரங்கள்,படப்பிடிப்பு நிகழ்ச்சி நிரல்கள், ஸ்டில்கள் போன்றவை அவற்றில் போடப்பட்டு உள்ளன.அது தமன்னாவின் பேஸ்புக் என ரசிகர்கள் ஏமாந்து தொடர்பு வைத்துள்ளனர்.இது பற்றி அறிந்த தமன்னா அதிர்ச்சியடைந்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில், பேஸ்புக், டுவிட்டரில் நான் இல்லை.என் பெயரில் மோசடி நடக்கிறது.ரசிகர்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
கிராமத்து வேடத்தில் நடிக்க Ajith விருப்பம்!
.jpg)
பில்லா, அசல், மங்காத்தா உள்ளிட்ட அஜீத் படத்தின் கதைகள் நகரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. மேலும் தற்போது வெளியாக இருக்கும் பில்லா-2 திரைப்படத்தின் கதையும் அப்படிதான்.
தொடர்ந்து நகரத்தின் பின்னணியாக கொண்டு கதை அமைவதால் சற்று மாறுதலாக கிராமத்து வேடத்தில் நடிக்க அஜீத் ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தன்னுடைய இந்த விருப்பத்தை அஜீத் நண்பர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. எனவே இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியானாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.
Kochadaiyan இன் ரி.வி உரிமை Jeya விற்கு!

ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் டி.வி. உரிமையை அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜெயா டி.வி.ரஜினி நடிப்பில், அவரது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் உருவாகிவரும் படம் கோச்சடையான்.3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினி ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் ஆதி,சரத்குமார்,ஷோபனா,ருக்மணி,இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்ச்செலவில் தயாரித்து வருகிறது.தற்போது படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.இதனிடையே இப்படத்தின் வியாபார தகவலை ஈராஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியுள்ளதாவது, ரஜினியுடன் கைகோர்த்து படம் பண்ணியது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது.ரஜினியின் முந்தைய படங்களான சிவாஜி,எந்திரன் படங்களை போன்று கோச்சடையான் படமும் மாபெரும் வெற்றி பெறும் என்று நம்புகிறோம். கோச்சடையான் படத்தை இந்த ஆண்டு இறுதியில் வெளியிட முடிவு செய்துள்ளோம். இப்படத்தின் டிவி உரிமையை ஜெயா டி.வி, வாங்கி இருக்கிறது. தெலுங்கு உரிமையை கணபதி பிலிம்ஸ் பெற்றிருக்கிறது.மேலும்,இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டோக்கியோவிலும்,பிரிமியர் காட்சிகளை லாஸ் ஏஞ்சல்ஸ்,லண்டன் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈராஸ் நிறுவனம் கார்பன் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து கோச்சடையான் மொபைல் என்ற பெயரில் புதிதாக 5 லட்சம் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.இந்த கோச்சடையான் போனில் கோச்சடையான் படத்தின் பட ஸ்டில்ஸ்,டிரைலர்,பாடல்கள்,ஸ்கிரீன் சேவர்,ரஜினியின் வசனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களும் நிறைந்து இருக்கும்.மேலும் டிஜிட்டல் முறையில் ரஜினிகாந்தின் கையெழுத்து மொபைலின் பின்புற பேனலில் அச்சிடப்பட்டு இருக்கும்.இந்த மொபைல் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் கோச்சடையான ஒடியோ ரிலீஸின் போது வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருந்த கோச்சடையான படம், கிராபிக்ஸ் உள்ளிட்ட காட்சிகள் படத்தில் அதிகம் இருப்பதால் அதற்கான வேலையும் முடிய கால தாமதம் ஆகும் என்பதால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்றும், ரஜினியின் பிறந்த நாளான 12-12.2012 அன்று இப்படத்தை வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது.
இசைஞானியோடு சேர்ந்து இல் Olympic கலக்க இருக்கும் A.R.Rahman!

இளையராஜாவை தொடர்ந்து ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் அதிர போகிறது.உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது லண்டனை நோக்கி திரும்பி கொண்டு இருக்கிறது.காரணம் 2012 ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெற இருக்கிறது. இந்தப்போட்டிக்கான துவக்க விழா ஏற்பாடுகள் அனைத்து பிரம்மாண்ட முறையில் தயாராகி வருகிறது.பிரபல ஹொலிவுட் டைரக்டர் டேனி போயல் துவக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்தாண்டு லண்டன் ஒலிம்பிக் துவக்க விழா குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விசேஷமானது.காரணம் இசைஞானி இளையராஜாவின் பாடல் இடம்பெற இருக்கிறது என்பது தான்.1980களில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ராம்லட்சுமணன் என்ற படத்தில் இடம்பெற்ற நான்தான் கொப்பண்ணடா என்ற பாடல் லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழா நிகழ்ச்சியில் ஒலிக்க இருக்கிறது.இதுவே மிகப்பெரிய கவுரமாக இருந்த தமிழ்ர்களுக்கு இப்போது இன்னொரு கவுரவமும் சேர்ந்து இருக்கிறது.நமது இசைஞானியின் பாடலோடு,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரியும் இந்த ஒலிம்பிக்கில் அதிரபோவது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது, பாயலுடன் இணைந்து ஒலிம்பிக் துவக்க விழாவில் நான் ஒரு இசையை கொடுக்க போகிறேன்.அது எந்தமாதிரியான இசை என்று இப்போது சொல்ல முடியாது.துவக்க விழாவின் போது நீங்களே பாருங்கள் என்று கூறியுள்ளார்.இதே டேனி பாயலுடன் இணைந்து தான் ஸ்லம்டாக் மில்லினியர் என்ற படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு சர்வதேச நிகழ்ச்சியில்,இசை உலகில் இந்தியாவின் இரு துருவ நட்சத்திரங்களான இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஒலிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களும்,குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
5 நிமிட காட்சிக்கு ரூ.25 லட்சம் சம்பளமாக பெற்ற Anushka!
.jpg)
தமிழ் திரைப்படம் ஒன்றில் கௌரவ வேடத்தில் நடிப்பதற்கு ரூ.25 லட்சம் சம்பளமாக பெற்றாராம் அனுஷ்கா.விக்ரம் நடிக்கும் தாண்டவம் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் அனுஷ்கா.இதற்கிடையில் சகுனி படத்தில் கார்த்தியுடன் கௌரவ வேடத்தில் நடித்தார். படத்தில் 5 நிமிடமே வரும் இக்காட்சிக்காக அனுஷ்கா ரூ.25 லட்சம் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
நடிகர், நடிகைகள் கௌரவ வேடத்தில் நடிப்பது புதிதல்ல. ஆனால் ஒரு சிலர் சம்பளம் பெற்றுக் கொண்டு தான் நடிக்க வருகிறார்கள். இன்னும் சிலர் நட்புக்காக இலவசமாக நடிக்கின்றனர்.கௌதம் மேனனின் “விண்ணைத் தாண்டி வருவாயா” மற்றும் நடுநிசி நாய்கள் படத்தில் சமந்தா கௌரவ வேடத்தில் நடித்தார்.
அதேபோல் ஒரு “கல் ஒரு கண்ணாடி” மற்றும் சகுனியில் ஆண்ட்ரியா கௌரவ தோற்றத்தில் நடித்தார்.5 நிமிட காட்சிக்கு அனுஷ்கா ரூ.25 லட்சம் பெற்றாரா? என அவரது மேனேஜரிடம் கேட்டபோது அதுபற்றி கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.இதுபற்றி ஒரு இயக்குனர் கூறும் போது, தீபிகா படுகோன், கரீனா கபூர் போன்ற பிரபல நடிகைகள் கௌரவ வேடத்தில் நடிப்பது படத்துக்கு கூடுதல் பலத்தை தரும்.
அதுபோல் பிரபலங்களை நடிக்க கேட்கும் போது அவர்கள் அதிக சம்பளம் கேட்பது சகஜம். அவ்வளவு சம்பளம் கொடுத்து நடிப்பதும் வீண் இல்லை.சில சமயம் இத்தகைய கௌரவ தோற்றங்கள் படத்தின் வெற்றிக்கு உதவுவதுடன் அதில் நடிக்கும் நடிகர், நடிகைக்கும் மார்க்கெட் மதிப்பை கூட்டுகிறது என்றார்.
கமலின் Viswaroopam படத்தின் Trailer வெளியீடு! (Video இணைப்பு)

நாயகன் கமலின் விஸ்வரூபம் படத்தின் அதிரடியான டிரைலர்கள் வெளிவந்துள்ளன.உலகநாயகன் கமலின் பிரமாண்டத்தில் விஸ்வரூபம் திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படத்தை கமலே இயக்கி, நடித்து இணை தயாரிப்பும் செய்துள்ளார். கமலுடன் ஆண்ட்ரியா, பூஜாகுமார் நாயகிகளாக நடித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான், அமெரிக்கா நாடுகளை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது விஸ்வரூபம்.தொடக்கத்தில் வெளியான டிரைலரை விட தற்போது வெளிவந்துள்ள டிரைலர்கள் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது.விஸ்வரூபம் திரைப்படம் மூலம் ஹாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கமல் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காலணி இன்றி பிறர் நலனிற்காக ஓடிய பெண்மணி! (Video இணைப்பு)

றேஸ் ஹேய்ம் என்று அழைக்கப்படும் 18 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் காலணிகள் எதுவிமின்றி அமெரிக்க நகரங்ளுக்கு இடையில் ஓடி சாதனை படைத்துள்ளார்.இச்சாதனையானது பராமரிப்பு நிலையம் ஒன்றில் வாழும் குழந்தைகளுக்காக காலணிகளை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு நிதியினை சேகரிப்பதற்காகவே நிகழ்த்தப்பட்டுள்ளது(நாமும் வாழ்வோம் பிறரையும் வாழவைப்போம்!). இதன் மூலம் 2,900 அமெரிக்க டொலர்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Data Recovery க்கு உதவும் பயனுள்ள மென்பொருள்!
.jpg)
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன.
இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது.
ஹார்ட் டிஸ்க்கில் பிரச்சினை எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும்.
எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்.
தரவிறக்க இங்கே அழுத்தவும்.
முடங்கி போகும் கணணிகளுக்கு உதவும் AVG Rescue!

கொம்யூட்டர் பயன்படுத்தும் பலரும், கொம்யூட்டர் கிராஷ் ஆனவுடன் தான், அடடா எதிர்பார்க்க வில்லையே இப்படி ஆகும் என்று எண்ணுகிறார்கள்.நண்பர்களுக்கு போன் போட்டு கேட்கிறார்கள். ஒன்றும் முடியாத நிலையில் ஏதோதோ செய்து இறுதியில் ரீ போமட் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டலேஷன் அளவிற்குப் போகிறார்கள்.கம்ப்யூட்டர் ஒரு டிஜிட்டல் இயந்திரம். எந்த நேரமும் அது முடங்கிப் போகும் என்பதே உண்மை. சரி, ஊதுகிற சங்கை ஊதி வைப்போம் என்ற கதையாக இதோ இன்னும் ஒரு காப்பாற்றும் சிடி தயார் செய்திடும் தகவலை இங்கு தருகிறோம்.
இதன் பெயர் ஏவிஜி ரெஸ்க்யூ சிடி. ஆம், நமக்கெல்லாம் இலவசமாக ஆண்ட்டி வைரஸ் தரும் ஏவிஜி நிறுவனமே இதனையும் தருகிறது. இதுவும் இலவசமே.இந்த ரெஸ்க்யூ சிடி வைரஸ் பாதிப்பினால் முடங்கிப் போகும் கொம்யூட்டர்களுக்கு ஒரு சிறந்த டொக்டராக இயங்குகிறது. அது மட்டுமின்றி சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள் மற்றும் ஐ.டி. நிர்வாகிகளுக்கும் உதவுகிறது. இதன் மூலம் சிஸ்டம் நிர்வாகம் செய்திடலாம், வைரஸ் மற்றும் ஸ்பைவேர்களால் பாதித்த கொம்யூட்டர்களை மீட்கலாம். எம்.எஸ். விண்டோஸ் மட்டுமின்றி, லினக்ஸ் சிஸ்டங்களையும் மீட்கலாம். யு.எஸ்.பி. ஸ்டிக் அல்லது சிடி வழியாக கிளீன் பூட் ஒன்றை மேற்கொள்ளலாம்.
இந்த ரெஸ்க்யூ சிடி என்பது லினக்ஸ் மூலம் வழங்கப்படும் இலவச போர்ட்டபிள் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகும். உங்களுடைய சிஸ்டம் பொதுவான வழிகளில் பூட் ஆகாத போது, இந்த சிடியைக் கொண்டு பூட் செய்திடலாம். அத்துடன் வைரஸ் பாதித்த கொம்யூட்டரைக் குணப்படுத்தி, வைரஸ்களை நீக்கும். இந்த வசதிகளைத் தருவதோடு கீழ்க்காணும் கூடுதல் செயல்பாடுகளையும் இது தருகிறது. இரண்டு பனல்களில் பைல் மேனேஜர் வசதி,எளிய விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் ஹார்ட் டிரைவ் ரெகவரி டெஸ்ட் டிஸ்க் ஆகச் செயல்பாடு நெட்வேர்க் (சேவர், டொமைன், ஐபி முகவரி போன்றவை)வசதிகளைக் கண்டறியும் வசதி.இதனைப் பயன்படுத்த 512 எம்பி ராம் மெமரி, இன்டல் பெண்டியம் 300 எம்.எச்.இஸட் ப்ராசசர் இருந்தால் போதுமானது. விண்டோஸ் 2000க்குப் பின் வந்த அனைத்து விண்டோஸ் இயக்கங்கலிலும் செயல்படும்.
பொதுக் கணணிகளை பயன்படுத்துபவர்களுக்கு!
.jpg)
கொம்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கொம்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கொம்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா? அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கொம்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.
1.என்றைக்கும் பொதுக் கொம்யூட்டர்களில் உங்கள் பாங்க் எக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கொம்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் எக்கவுண்ட் அதற்கான பாஸ்வேட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் எக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு.
2.உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கொம்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் கொப்பி செய்து பின் கொம்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசைக்கில் பின்னில் கூட இருக்கக் கூடாது.
3.பொதுக் கொம்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. இதனாலும் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் போக வாய்ப்புண்டு.
4.பொதுக் கொம்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்துவிடுங்கள். அல்லது Delete All பட்டனைத் தட்டுங்கள்.
5.இன்னொரு சின்ன வேலையும் பாதுகாப்பானதே. கொம்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும்.பைல்களை அழித்துவிடும்.
கூகுள் தேடல்
யாழ்ப்பாணத்தின் காலநிலை
