இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தியானது சாதாரணமாக வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதற்காகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ அல்ல.மாறாக இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பெண் ஏன் இச் சாதனையை மேற்கொண்டார் என்று சிந்தித்து செயற்படுவதற்காகவே.
றேஸ் ஹேய்ம் என்று அழைக்கப்படும் 18 வயது நிரம்பிய பெண்மணி ஒருவர் காலணிகள் எதுவிமின்றி அமெரிக்க நகரங்ளுக்கு இடையில் ஓடி சாதனை படைத்துள்ளார்.இச்சாதனையானது பராமரிப்பு நிலையம் ஒன்றில் வாழும் குழந்தைகளுக்காக காலணிகளை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு நிதியினை சேகரிப்பதற்காகவே நிகழ்த்தப்பட்டுள்ளது(நாமும் வாழ்வோம் பிறரையும் வாழவைப்போம்!). இதன் மூலம் 2,900 அமெரிக்க டொலர்களை நன்கொடையாகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.