Currently Under Construction
பிறப்பு | யூலை 27, 1963 |
பிறப்பிடம் | திருவனந்தபுரம்,கேரளா |
இசை வகை(கள்) | திரைப்பட பின்னணிப் பாடகி,கர்நாடக இசை |
தொழில்(கள்) | பாடகி |
இசைத்துறையில் | 1982–இன்று வரை |
சித்ரா என்றாலே அவரது புன்னகை சிந்தும் முகமே ரசிகர்களின் கண் முன் தோன்றுகிறது. வாடாத மலரைப் போன்று மாறாத புன்னகை அவரின் தனித்த முத்திரையாகì காண்பவரை வசீகரிக்கிறது. குழந்தை சித்ரா வானொலியில் ஒலிபரப்பபட்ட பி.சுசிலாவின் 'பிரியதமா பிரியதமா' என்ற பாடலைத் தன் பட்டு உதடுகளை அசைத்துப் பாட முயற்சித்த பொழுதே அவருடைய எதிர் காலம் இசை என்று எழுதப்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது.
பொம்மைகளை வைத்து விளையாடும் வயதில் சின்னஞ்சிறு சித்ரா தன் கேள்வி ஞானத்தினாலேயே கேட்ட பாடல்களை நினைவுபடுத்திக் கொண்டு பாடும் திறமை படைத்தவராக இருந்தார்.அவர் தம் ஐந்தாம் பிராயத்திலேயே அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார் என்பது வியக்க வைக்கிறது.
விருதுகள்
திருமதி.சித்ரா வாங்கிய விருதுகள் கணக்கற்றவை.தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா,ஆந்திரா என்ற நான்கு மாநில விருதுகளையும் பெற்ற ஒரே பின்னணிப்பாடகி அவரே.1985ஆம் ஆண்டில் துவங்கி பதினைந்து முறை (எஸ் ஐானகி அவர்கள் 12 முறை) அவர் கேரள மாநில விருதைப் பெற்றுள்ளார். அவர் ஆறு முறை ஆந்திர மாநில நந்தி விருதுகளையும், இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும் , நான்கு முறை தமிழ் நாடு மாநில விருதுகளையும் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. அவருக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. விராசத் ஹிந்தி படத்தில் paayalEn chunmun chunmun' பாடலின் மூலம் சித்ரா தென்னிந்தியப் பின்னணியில் இருந்து ஹிந்தி மொழியில் பாடி தேசீய விருது பெற்ற முதல் பாடகி என்ற சிறப்பைப் பெற்றார்.
தேசிய விருது பெற்ற இவரது 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.12,000 பாடல்களுக்கு மேல் பாடிய சித்ரா அவர் S.P.சரண்,விஐய் ஐேசுதாஸ் முதலிய அடுத்த தலை முறை பாடகர்களுடனும் பாடுகிறார்.அவர் சாதனைகளின் சிகரமாக 2005ஆம் ஆண்டில் மார்ச் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் திரு.அ.ப.ஐே அப்துல் கலாம் அவர்களிடமிருந்து 'பத்ம ஸ்ரீ' விருது பெற்றதைச் சொல்லலாம்.