

நட்சத்திர ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிம்பு-நயன்தாரா ஒருவரையொருவர் மனம்விட்டு பேசியுள்ளனர். முடிவில் அவர்கள் இருவரும் இணைந்து புகைப்படம் ஒன்றையும் எடுத்துக் கொண்டனர். நயன்தாராவுடன் ஏற்பட்ட இந்த சந்திப்பு குறித்து சிம்பு கூறுகையில் நயன்தாரா, ஒரு நல்ல ஆத்மா. நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம். எங்களுக்குள் மீண்டும் காதல் துளிர்த்திருக்கிறது என்று சொல்வது முட்டாள்தனமானது.நாங்கள் ஒரே தொழிலில் இருப்பதால் எங்களுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கிறோம். மேலும் சினிமா சம்பந்தமான விழாக்களில் பார்த்து பேசுவதோடு அவரவர் வேலையை செய்து கொண்டு இருக்கிறோம். நயன்தாரா அவரது வேலையை சிறப்பாக செய்கிறார். அவர் நலமுடன் இருக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்." என்றார்.
இந்த சந்திப்பின் போது சிம்பு-நயன்தாரா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விடயம், இதற்கு முன்பு சிம்பு-நயன்தாராவுடைய காதல் பிரிவுக்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொண்ட அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியானதே. அப்படியிருக்கையில் காதல் பிரிவிற்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டதானது, யாரோ ஒருவரை வெறுப்பேற்ற இருக்கலாம் என்று தெரிகிறது.
