அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆகவே நாம் நமது சருமத்தைக் காக்க வேண்டியுள்ளது. நம் சருமத்தை செயற்கை முறையில் பாதுகாப்பதை விட இயற்கை முறையில் நம் வீட்டில் இருக்கும் கரட்டை பயன்படுத்தி பாதுகாக்கலாம். கரட் நம் உடலுக்கு மட்டும் உகந்தது அல்ல, நம் சருமத்திற்கும் மிகவும் சிறந்தது.
செய்யும் முறை
2 கரட்டை வேக வைத்து மசித்துக்கொள்ளவும். மசித்த கரட்டுடன் 1 ஸ்பூன் ஒலிவ் ஒயில், 1/2 ஸ்பூன் தேன் , லெமன் ஜூஸ் கலந்து முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடன் ஊற வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி விடவும். இதனால் முகமானது பொலிவுடன் அழகாகக் காணப்படும்.இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் உங்கள் முகம் படிப்படியாக பொலிவடைவதை பார்க்கலாம்.