

இளையராஜாவை தொடர்ந்து ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் லண்டன் ஒலிம்பிக் துவக்க விழாவில் அதிர போகிறது.உலகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது லண்டனை நோக்கி திரும்பி கொண்டு இருக்கிறது.காரணம் 2012 ஒலிம்பிக் போட்டிகள் லண்டனில் நடைபெற இருக்கிறது. இந்தப்போட்டிக்கான துவக்க விழா ஏற்பாடுகள் அனைத்து பிரம்மாண்ட முறையில் தயாராகி வருகிறது.பிரபல ஹொலிவுட் டைரக்டர் டேனி போயல் துவக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
இந்தாண்டு லண்டன் ஒலிம்பிக் துவக்க விழா குறிப்பாக தமிழர்களுக்கு மிகவும் விசேஷமானது.காரணம் இசைஞானி இளையராஜாவின் பாடல் இடம்பெற இருக்கிறது என்பது தான்.1980களில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த ராம்லட்சுமணன் என்ற படத்தில் இடம்பெற்ற நான்தான் கொப்பண்ணடா என்ற பாடல் லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழா நிகழ்ச்சியில் ஒலிக்க இருக்கிறது.இதுவே மிகப்பெரிய கவுரமாக இருந்த தமிழ்ர்களுக்கு இப்போது இன்னொரு கவுரவமும் சேர்ந்து இருக்கிறது.நமது இசைஞானியின் பாடலோடு,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரியும் இந்த ஒலிம்பிக்கில் அதிரபோவது இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது, பாயலுடன் இணைந்து ஒலிம்பிக் துவக்க விழாவில் நான் ஒரு இசையை கொடுக்க போகிறேன்.அது எந்தமாதிரியான இசை என்று இப்போது சொல்ல முடியாது.துவக்க விழாவின் போது நீங்களே பாருங்கள் என்று கூறியுள்ளார்.இதே டேனி பாயலுடன் இணைந்து தான் ஸ்லம்டாக் மில்லினியர் என்ற படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு சர்வதேச நிகழ்ச்சியில்,இசை உலகில் இந்தியாவின் இரு துருவ நட்சத்திரங்களான இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ஒலிக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்களும்,குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
