Unlimited Music, Everywhere. Try Rdio for Free.
ooVoo LLC
பிரதான செய்திகள்
பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்


























சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்



























பெண்களுக்காக

அலுவலகத்தில் இருந்து வீட்டுக் கணினியை தொடர்பு கொள்ள!

அனைவருக்கும் வணக்கம்! உங்கள் ஊரில் இடம்பெறும் சமய,கலாசார நிகழ்வுகள் மற்றும் உங்களது ஆக்கங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன.தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி- vettiinayam@hotmail.com, ஸ்கைப் முகவரி:- Vetti.Inayam
Banner

நண்பர்களே உங்கள் வீட்டு கணினியில் உள்ள கோப்புகளை அலுவலக கணினியில் இருந்து கொண்டு பார்ப்பது எப்படி இதற்கு டீம் வீவர் வழியாக பார்க்கலாம் என்று கூறுவீர்கள்.சரிதான் ஆனால் டீம் வீவர் திறந்து வைத்து அதில் வரும் ஐடி மற்றும் கடவுச் சொல் கொடுத்தால்தான் எதிர்ப்பக்கம் உள்ள கணினியை பார்க்க முடியும்.ஆனால் இந்த மென்பொருள் மூலமாக எதிர்ப்பக்கம் உள்ள கணினி ஆன் செய்திருந்தால் மட்டும் போதும் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இதற்கு தேவை ஒரு ஜிமெயில் ஐடி மற்றும் ஜிப்ரிட்ஜ் மென்பொருள்.முதலில் ஜிபிரிட்ஜ் மென்பொருளை இங்கு இருந்து தரவிறக்கி கொள்ளுங்கள்.பின்னர் இந்த மென்பொருளை உங்கள் வீட்டில் உள்ள கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.நிறுவிய பிறகு உங்கள் கணினியில் உங்களுடைய ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கேட்கும்.கொடுங்கள் பிறகு AutoStart மற்றும் Remember me என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள் வேண்டும் என்றால் AutoStart தேர்வு செய்தால் விண்டோஸ் ஆன் செய்த பிறகு தானாகவே ஜிபிரிட்ஜ் அப்ளிகேசன் திறக்கும்.Remember me என்பதை தேர்வு செய்தால் உங்கள் ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் நினைவில் வைத்திருக்கும்.இந்த இரண்டையும் தேர்வு செய்வது நல்லதே.பிறகு உங்கள் கணினியில் இது போல டாஸ்க்மேனஜரில் அமர்ந்து கொள்ளும்.இது போல இரண்டு பக்கமும் செய்து கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் எந்த கணினியை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த கணினியில் டாஸ்க்மேனஜரில் அமர்ந்துள்ள  ஜிப்ரிட்ஜில் வலது கிளிக் செய்து அதில் Show GBridge என்பதனை தேர்வு செய்யுங்கள்.பிறகு DesktopShare என்பதனை கிளிக் செய்தால் அதில் வரும் Configure GBridge DesktopShare (VNC) என்பதனை கிளிக் செய்யுங்கள்.அங்கு முதலில் Allow என்பதனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.அடுத்து இரண்டாவது பெட்டியில் Allow after Verify DesktopShare password (use built-in VNC server)  என்ற பட்டனை தேர்வு செய்தால் கீழே ஒரு கடவுச்சொல் பெட்டி திறக்கும் அங்கு நீங்கள் ஒரு புது கடவுச்சொல் கொடுத்துக்கொள்ளுங்கள். ( உ.ம் – 12345@12345) பிறகு ஒகே பட்டனை அழுத்தி வெளி வாருங்கள்.

அடுத்து உங்கள் எதிர்ப்பக்கம் உள்ள கணினியில் ஜிப்ரிட்ஜ் திறந்து அதில் உங்கள் வீட்டுக் கணினியில் கொடுத்த ஜிமெயில் ஐடி மற்றும் கடவுச்சொல் கொடுத்தால் உங்கள் வீட்டுக் கணினியை உங்கள் ஜிபிரிட்ஜில் உள்ள MyComputers பகுதியில் தெரியும்.அந்த கணினியை வலது கிளிக் செய்து Access Gbrige builtin VNC என்பதனை தேர்வு செய்யுங்கள் இப்பொழுது கடவுச்சொல் கேட்கும் நீங்கள் அந்த கணினியில் கொடுத்த ஒரு கடவுச்சொல் கொடுத்தீர்கள் அல்லவா ( உ.ம் – 12345@12345) அதை இங்கே கொடுங்கள்.இது போல செய்ய ஜிபிரிட்ஜ் மென்பொருள், ஜிமெயில் ஐடி, இரண்டு பக்கமும் இணையம் இருந்தால் போதும்இந்த மென்பொருள் மூலம் ஜிமெயில் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்பி கூகிள்சட் செய்ய முடியும்.இரண்டு கணினிகளுக்கு இடையே Sync செய்ய முடியும்.







Bookmark and Share
Share and Enjoy:
விளம்பரங்கள்
திரைப்படங்கள்
பிந்திய செய்திகள்
Compare hotel prices and find the best deal - HotelsCombined.com
HP Download StoreCompUSA
Powered By:- Blogger