

இன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சிறிது நாம் நிதானம் தவறினாலும் நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.
1.முன்பணம் கட்டாதீர்கள்:
ஏமாற்றப்படும் பல வேளைகளைப் பட்டியலிட்டால், முன் பணம் கட்டச் சொல்லி அழைக்கும் அழைப்புகளுக்குப் பலியாவோரே அதிகமாய் இருப்பதைப் பார்க்கலாம். பெரிய பரிசு உள்ளது. கடன் தீர்க்கப் பணம் தருகிறோம். பெரிய வேலை உங்களுக்கு மட்டுமே தருகிறோம். இலவசமாய் இயக்கிப் பார்க்கலாம் என செய்திகளைத் தந்து, அதன் பின்னர் முன் பணமாக ஒரு தொகையை செலுத்தச் சொல்லி அழைப்பு வரும்.இதனை மிக அழகாக நியாயப்படுத்கும் வகையிலும் பல செய்திகள் தரப்படும். பெரிய அளவில் தான் பணம் அல்லது உதவி கிடைக்கப் போகிறதே, செலுத்தினால் என்ன என்று ஒரு கணம் எண்ணிவிட்டால், உங்கள் பணம் அவ்வளவு தான் அல்லது தொடர்ந்து மேலும் மேலும் பணம் செலுத்த கட்டாயப்படுத்தப்படுவீர்கள். இது போல செய்திகளை அது எந்த இடத்திலிருந்து வந்தாலும் உதாசீனப்படுத்திவிடுவதே நாம் பலியாகாமல் இருக்க ஒரே வழி.
2.கணக்கு இலக்கம்:
மெயில்களை அனுப்பி உங்களை வீழ்த்தும் பெரும்பாலான ஸ்கேம் செய்திகளில், உங்களுடைய பேங்க் எக்கவுண்ட் எண், நெட்பாங்கிங் பாஸ்வேட் கேட்டு வரும் மெயில்களே அதிகம். எக்கவுண்ட் எண் மற்றும் தகவல்களைக் கொடுத்துவிட்டீர்கள் என்றால் உங்கள் எக்கவுண்ட் அவ்வளவுதான். ஒரு சதம் கூட அதில் இருக்காது. நீங்கள் சரியான இணைய தளத்தில் பொருள் வாங்குவதாக இருந்தாலும், உங்கள் கிரெடிட் காட்டை மட்டுமே பயன்படுத்தவும்.
3.தனிப்பட்ட தகவல்கள்:
ஒரு சிலர் மெயில் செய்தியில் வரும் ஏமாற்று வார்த்தைகளை நம்பி, தங்களைப் பற்றிய தனி நபர் தகவல்களைத் கொடுத்துவிடுவார்கள். சிலர் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் குறித்த தகவல்களையும் தங்களை அறியாமல் கொடுத்து மாட்டிக் கொள்வார்கள். இது போன்ற விஷயத்தில் அதிகக் கவனத்துடன் நடந்து கொண்டு, மாட்டிக் கொள்ளும் நிகழ்வினைத் தவிர்க்க வேண்டும்.
4.போலி பேஸ்புக் செய்திகள்:
பேஸ்புக்கில் எக்கவுண்ட் இல்லாமல் இருந்தால் கூட உங்கள் எக்கவுண்ட்டிற்குப் பலவாரியாக செய்திகள் வரும். புகழ்பெற்றவர்கள் மாட்டிக் கொண்டார்கள் - அது பற்றி அறிய வேண்டுமா என ஒரு செய்தி. உங்கள் பேஸ்புக் எக்கவுண்ட்டை ஒருவர் நீக்கிவிட்டார். நீக்கியவர் யாரெனத் தெரியும். மீண்டும் எக்கவுண்ட் தொடங்கலாமே என்று ஒரு செய்தி வரும். இது போன்ற செய்திகள் எல்லாம், உங்களைச் சிக்க வைக்கத்தான்.
