புற்றுநோய் சிகிச்சை முடித்துக்கொண்டு கடந்த சில திகதிகளுக்கு முன்பு, இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங் வீடு திரும்பினார்.தற்போது வீட்டில் ஒய்வெடுத்து வரும் யுவராஜ், இன்னும் ஓரிரு வாரங்களில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, விரைவில் இந்திய அணிக்கு திரும்புவேன். அதற்கான பயிற்சிகளை இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்க உள்ளேன்.கிரிக்கெட் களத்திற்கு விரைவில் திரும்பி இந்திய அணியின் தொப்பியை அணிய ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.