

முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் பொதுமக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கடவுள் இல்லை என்று நம்புகின்றனர். மிகச்சிலர் (8%) மனிதனை நேசிக்கும் கடவுளை நம்புவதாகத் தெரிவித்தனர்.சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் ஆய்வுக்குழுவினர் டாம் ஸ்மித் என்பவர் தலைமையில் இறை நம்பிக்கை குறித்த ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
முப்பது நாடுகளில் 1991, 1998 மற்றும் 2008ம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் (Data) கொண்டு ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் முடிவில் கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்தவர்களில் 52சதவீதம் பேருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதும் மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்தவர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே கடவுள் நம்பிக்கை கிடையாது என்பதும் தெரியவந்தது.
இரு ஜேர்மனிநாடுகளையும் விட இவற்றின் அருகில் உள்ள போலந்து நாட்டில் அறுபது சதவீதம் பேர் கடவுகளை நம்புகின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம், போலந்து கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுவதுதான்.மேற்கு ஐரோப்பாவின் மேம்பட்ட நாடுகளான ஸ்வீடன், ஃபிரான்ஸ், பிரிட்டன் போன்றவற்றைக் காட்டிலும் மேற்கு ஜேர்மனியில் கடவுள் நம்பிக்கை உள்ளவர் 54 சதவீதம் அதிகமாக உள்ளனர்.
உள்ளூர் ஊடகச் செய்தித்தாள் ஒன்றில் கிறிஸ்தவ தேவாலயங்களைக் குறித்து தகவல் தெரிவிக்கும்போது விசுவாசிகள் வாழும் மேற்கு ஜேர்மனியிலும் கூட சபையோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதால் தேவாலயங்கள் மூடப்பட்டு வருவதாகத் தகவல் தெரிவிக்கின்றன.நாட்டின் மிகப்பெரிய சபையான கெல்சென்கிர்ச்சென்-வாட்டென்ஷீட் சபையில் உள்ள 39 தேவாலயங்களில் 24 மூடப்பட்டு விட்டது. 1990ம் ஆண்டில் 29 ஆகக் குறைந்துவிட்டது. பல தேவாலயங்கள் மூடப்படும் நிலையில் உள்ளது என்றார். நாங்கள் சிறுபான்மையினராக மாறிக்கொண்டிருக்கிறோம் என்றார்.
மறுமலர்ச்சி சபையினரான புரோட்டஸ்டண்ட் சபையினர் அதிகமாகப் பெருகவில்லை. எனவே தற்போது நாங்கள் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் அளிப்பதைக் காட்டிலும் இறந்தவர்களுக்கு நல்லடக்க ஆராதனை செய்யவே அதிகம் வேண்டப்படுகிறோம். தேவாலய நிதிநிலையும் மோசமாகிவிட்டது.பவேரியாவில், கத்தோலிக்க சபைகளும் குறைந்து வருகின்றன. சபைகளை நிறுவி ஆராதனை நடத்திய காலம் மாறி, ஞாயிற்றுக்கிழமையன்று சிறு பிரசங்கங்களை மட்டுமே நடத்தும் நிலை உருவாகிவிட்டது. விசுவாசிகள் பெருங்கூட்டமாக கூடி ஆராதிக்கும் நிலை முற்றிலும் மாறிவிட்டது.
போதகர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. கத்தோலிக்க சபையையும் அதிலிருந்து மலர்ந்து வந்த மறுமலர்ச்சி சபையையும் ஒன்றாக இணைக்கும் எண்ணம் கூடத் தோல்வியில் முடிந்துள்ளது.முன்னாள் மேற்கு ஜேர்மனியில் 68 வயதுக்கு மேற்பட்ட 38 சதவீதம் பேர் கடவுளை நம்புகின்றனர். ஆனால் 28 வயதுக்குக் குறைந்தவர்களில் 18 சதவீதம் பேர் மட்டுமே கடவுளை நம்புகின்றனர். ஜேர்மனியில் கடவுள் நம்பிக்கை குறைந்துவதற்கான முக்கிய காரணம் இதுவேயாகும்.
