றுசிடா பாதவி என்ற இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது இரு கைகளையும் இழந்துள்ள போதிலும் புகைப்படத் துறையில் சாதித்துள்ளார்.இவர் தனது 12 வயதில் ஏற்பட்ட விபத்து ஒன்றிலேயே இரண்டு முழங்கைகளுக்கு கீழான பகுதிகளையும் இழந்துள்ளார்.
தற்போது 44 வயதாகும் றுசிடா கடந்த 20 வருடங்களாக ஸ்டூடியோ ஒன்றை தொழில் ரீதியாக வெற்றிகரமான முறையில் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தனது கணவர், 13 வயதான மகன் ஆகியோருடன் சந்தோசமாகவே வாழ்க்கையை கழிக்கின்றார்.