அமெரிக்காவின் தென் கரோலினாப் பகுதியில் பிறந்து இரண்டு மாதங்களே ஆன குழந்தையை வளர்ப்பு நாயானது கொடூரமாகக் கொன்றுள்ளது.குறித்த சம்பவத்தின் போது குழந்தையின் தந்தை தனது மூன்று வயதுக் குழந்தையுடன் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.
மேலும் இக்குழந்தையின் தாய் வைத்தியரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். சமயம் பார்த்துக் காத்திருந்த நாய் குழந்தையை கடித்துக் குதறி கொலை செய்துள்ளது.