

கொலைவெறி பாட்டுக்கு நடனமாட தன்னை ஒப்பந்தம் செய்து ஏமாற்றிய தனுஷை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மன்னித்துவிட்டேன் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.கொலை வெறி பாடலுக்கு தனுஷுடன் ஆட இந்தி நடிகை ராக்கி ஷாவந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.கடைசி நேரத்தில் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ராக்கி ஷாவந்த், மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனுஷை கடுமையாகச் சாடினார்.
அப்போது அவர், கொலை வெறி பாடலுக்கு நடனம் ஆட மிகவும் ஆர்வமாக இருந்தேன். அந்த பாடலுக்கு நடனம் ஆட என்னை ஒப்பந்தம் செய்து விட்டு கடைசி நேரத்தில் அதை ரத்து செய்தது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது.என்னை நம்ப வைத்து மோசம் செய்து விட்டார் தனுஷ் என்று கடுமையான வார்த்தைகளை வெளியிட்டார்.
ஆனால் இப்போது நிருபர்களிடம் ராக்கி சாவந்த் கூறுகையில், கொலைவெறி பாடலுக்கு நான் தனுஷுடன் சேர்ந்து நடனம் ஆடி இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு அந்த வாய்ப்பு பறிபோனதால் அவரை திட்டினேன். இப்போது மன்னித்து விட்டேன் என்று கூறியுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நான் மிகவும் மதிக்கிறேன். அவருக்காக தனுஷை விட்டு விடுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
