தென்னிய திரைப்படங்களில் நடித்து வந்த நாயகி தமன்னா,பாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.கொலிவுட்டில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமன்னா அறிமுகம் ஆனார்.முதல்படம் வரவேற்பை பெறாவிட்டாலும் கொலிவுட்டில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.
விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் என்று நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார். ஆனால், தற்போது தமன்னாவிற்கு கொலிவுட்டில் வாய்ப்புகள் இல்லை.இதன்காரணமாக தெலுங்கில் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட்டில் களமிறங்குகிறார் தமன்னா.
பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கான் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.கொலிவுட்டில் அறிமுகமாகிற நடிகைகள் அனைவரின் வாழ்க்கையும் பாலிவுட்டில் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.