

Fribourg’s International Film Festival நடத்தும் சிறந்த படங்களுக்கான விருது வழங்கும் விழாவில், இஸ்ரேல் நாட்டின் படமான It’s never too late படத்தின் இயக்குநர் Ido fluck’s க்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.இவருடைய முதல் படத்திற்கு Regard d’Or trophy விருதும் 30,000 சுவிஸ் ஃபிராங்க் ரொக்கத் தொகையும் கிடைத்தது. இவருடைய முதல் படம் இந்தப் திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது.
மேலும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு இளம்பெண்ணின் கதையைக் கூறும் ‘Asmaa’ படத்திற்குப் சிறந்த பார்வையாளருக்கான பரிசு கிடைத்தது. எகிப்து நாட்டைச் சேர்ந்த இப்படத்தின் இயக்குநர் Amr Salama இதற்கான விருதைப் பெற்றார்.அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் ஒருவனால், அந்தச் சிகிச்சைக்கான செலவை மேற்கொள்ள இயலாத நிலையில் அவனது மனநிலையை வெளிப்படுத்தும் திரைப்படம் “The last Friday".
இந்த படத்திற்கான சிறப்பு விருது இப்படத்தின் இயக்குநர் Yahya Al-Abdallahவிற்கு வழங்கப்பட்டது. பிரான்ஸ், பிரேசில், அர்ஜெண்டினா நாடுகளின் கூட்டுத் தயாரிப்பான “Fond Memories” என்ற படம் Talent Tape விருதை வென்றது.இந்தப் படத்திற்கு 1900 சுவிஸ் ஃபிராங்க் ரொக்கத்தொகையும் தயாரிப்பாளருக்கு வழங்கப்பட்டது. இப்படத்தை ஜுலியா மூரத் இயக்கியிருந்தார்.
இந்தப்படத்திற்கு திரைப்படச் சங்கங்களின் சர்வதேச இணையமும் விருது வழங்கி கௌரவித்தது. கிறிஸ்தவர்களின் ஏகோபித்த பாராட்டையும் இந்தப் படம் பெற்றது.இந்த 26வது திரைப்படவிழாவில் சுமார் 30,000 பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
