

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் 100வது சதத்தை அடித்து சாதனை புரிந்தார்.மேலும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள், அதிக சதம், ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள், அதிக சதம் என்பது உள்பட பல சாதனைகளை அவர் புரிந்துள்ளார்.இந்நிலையில் கிரிக்கெட்டின் உச்சநிலையில் இருக்கும் டெண்டுல்கர் விளம்பரம் மூலமும் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்.
அடிடாஸ், கோகோ கோலா, பூஸ்ட் உட்பட 17 நிறுவனங்களில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் தனது 22 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் ரூ.500 கோடிக்கு மேல் சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது.இவருக்கு சராசரியாக ஒரு விளம்பரத்திற்கு வருமானம் ரூ.8 கோடியாகும். டோனிக்கு 9 முதல் ரூ.10 கோடி வரை கிடைக்கிறது என்றாலும் கிரிக்கெட் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரர்களில் நமபர் 1 இடத்தில் டெண்டுல்கர் தான் இருக்கிறார்.இவர் சமீபத்தில் தனது 100-வது சதத்தை அடித்ததன் மூலம், ரூ.30 கோடி பணம் கிடைத்துள்ளது.