

இந்தியன் பிறிமியர் லீக் இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் கிறிஸ் கெய்ல் மற்றும் ஏ.பி.டி வில்லியஸ் ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் ரோயல் செலஞ்ஜஸ் பெங்களூரூ அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.164 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்ஜஸ் பெங்களூரூ அணி 19.3 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
ரோயல் செலஞ்ஜஸ் பெங்களூரூ அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுதாடிய கிறிஸ் கெய்ல் 56 பந்துகளில் 87 ஓட்டங்களையும், ஏ.பி.டி வில்லியஸ் 39 பந்துகளில் 52 ஓட்டங்கைளையும் பெற்றனர்.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிசார்பாக பர்விந்தர் அவானா நான்கு விக்கெட்டுகளையும், பியுஸ் சல்வா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட இழப்பிற்கு 163 ஓட்டங்களைப் பெற்றது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பாக டேவிட் ஹசி 41 ஓட்டங்களைப் பெற்றதுடன், அசார் மஹட்மூட் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.ரோயல் செலஞ்ஜஸ் பெங்களூரூ அணிசார்பாக ஷஹீர் கான் மற்றும் அன்று மெக் டொனால்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.போட்டியின் சிறப்பாட்டக்காரராக கிறிஸ் கெய்ல் தெரிவுசெய்யப்பட்டார்.
