

கொலிவுட் நடிகையாக கலக்கிய நயன்தாரா நாயகன் பிரபுதேவாவினை காதலித்து பிரிந்தது ஏன் என்று பரபரப்பு பேட்டியளித்தார்.இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், காதலுக்காக எதையும் செய்ய நான் தயாராகவும், பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டுக் கொடுக்கவும் செய்தேன்.ஆனால் திருமணம் வரை சென்ற எங்கள் காதல் முறிந்துவிட்டது. காதலையோ அல்லது திருமணத்தையோ எடுத்துக் கொண்டால் அதில் முறிவு ஏற்படுவது என்பது நடக்கத்தான் செய்கிறது.
பொதுவாக காதல் வாழ்க்கையிலும், திருமண வாழ்க்கையிலும் முழுவதுமாக புரிந்து கொள்ளாமை என்பது இருக்கதான் செய்யும். இதனால் லேசான சச்சரவுகள் வருவதுண்டு.இவ்வாறு பிரச்னைகள் எல்லையோடு நின்று விடவேண்டும். அதுவே எல்லை மீறி போகும் போதுதான் காதல் முறிவு, திருமண முறிவு ஏற்படுகின்றன. என் விடயத்திலும் அப்படித்தான் நடந்தது.மேலும் இந்த உலகில் நிலையானது என்று எதுவும் கிடையாது. மக்கள் மாறுவது மட்டுமின்றி சூழ்நிலைகளும், செயற்பாடுகளும் மாறுகின்றன. அதுபோன்றதொரு மாற்றம் தான் என்னை பிரியச் செய்தது.
எங்கள் காதல் முறிவுக்கு பல காரணங்கள் இருக்கலாம். இதற்கு மேல் இந்த வி்டயத்துக்குள் ஆழமாக செல்ல நான் விரும்பவில்லை.எப்போது ஒரு உறவு சரியாக இல்லையோ, அப்போது எல்லாமே மாறி விடுவது இயற்கைதானே?நான் பிரபுதேவாவுடன் பழகிய போது 100 சதவீதம் உண்மையாக நடந்து கொண்டேன். ஆனால் இதற்கு மதிப்பில்லை எனும் போது உறவை முறித்துக் கொள்வதை தவிர வேறு வாய்ப்பு என்னவாக இருக்க முடியும்?
எங்களது இந்த காதல் பாதியில் முறிந்து போகும் என்று நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. ஆனால் வாழ்க்கையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை என் வி்டயம் உறுதிப்படுத்தியுள்ளது.காதல் வாழ்க்கையோ, திருமண வாழ்க்கையோ இருவரிடமும் புரிந்து கொள்ளுதலும், விட்டுக் கொடுத்தலும் இருந்தால் அந்த வாழ்க்கை வெற்றிகரமாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும் என்று கூறியுள்ளார்.
