பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு வருகை தருகிறார்.இவர் வருகிற 8ம் திகதி அஜ்மீரில் உள்ள கவாஜா முஹய்யத்தீன் சிஸ்டி தர்காவுக்கு வந்து வழிபாடு செய்கிறார்.இவரது வருகை முற்றிலும் மதரீதியிலானது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் சர்தாரி, இந்தியத் தலைவர்களை சந்தித்து தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்தாரியின் வருகை மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பிரச்சினைகள் மீது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இறுதியாக கடந்த 2009-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த மாநாட்டின் போது பிரதமர் மன்மோகன் சிங்கை ஆசிப் அலி சர்தாரி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.