சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படப்பிடிப்பிற்கான பிரதான காணொளி ஒன்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.நீண்ட இடைவேளிக்கு பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா இயக்கும் இப்படத்திற்கு கே.எஸ்.ரவிக்குமார் மேற்பார்வையாளராக பணியாற்றுகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் சுப்ரிம் ஸ்டார் சரத்குமார், ஷோபனா, நாசர், ஜாக்கி ஷெராப் போன்ற பிரபலங்கள் நடிக்கிறார்கள்.கோச்சடையான் படத்திற்கான பிரதான படப்பிடிப்புகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில காணொளி திரையுலகில் வெளியாகியுள்ளன. இந்த காணொளி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.