உலக வங்கி தலைவர் பதவிக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஜிம் யாங் கிங் என்பவருக்கு ஆதரவு தெரிவித்தார்.இப்பதவிக்கு நைஜீரியா நிதி மந்திரி நகோஷி ஒகோஜோ, கொலம்பியா முன்னாள் நிதி மந்திரி ஜோஸ் அந்தோணியோ ஆகியோர் மனு தாக்கல் செய்து உள்ளனர்.இவர்களில் ஜிம் யாங் கிம் அமெரிக்கா வாழ் கொரிய நாட்டவர் ஆவார். இவர் பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.
இந்நிலையில் டோக்கியோவுக்கு சென்ற அவர் ஜப்பான் நிதி மந்திரி ஜுன் அசூமியை சந்தித்து பேசினார். இதனையடுத்து அமெரிக்கா ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜிம் யாங் கிம்மை ஆதரிக்கப் போவதாக ஜப்பான் மந்திரி அறிவித்துள்ளார்.கிம் அடுத்த கட்டமாக சியோல், புதுடெல்லி, மெக்சிகோ ஆகிய இடங்களுக்கு சென்று ஆதரவை திரட்ட திட்டமிட்டுள்ளார்.