Earth Hour இற்காக உலகம் முழுவதிலும் மின் விளக்குகள் அணைப்பு! ( Video,Photo இணைப்பு)
திங்கள், 2 ஏப்ரல், 2012|
வெற்றி இணையம்
புவி வெப்பமடைதல் மற்றும் பருவநிலை மாற்றங்கள் தொடர்பான விழிப்புணர்ச்சியை அதிகரிப்பதற்காக 5 ஆண்டுகளுக்கு முன்னர் Earth Hour என்ற இயக்கம் தொடங்கப்பட்டது.தற்போது இந்த இயக்கம் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. மேலும் சுமார் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகரங்கள் கடந்தாண்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டன.
சர்வதேச விண்வெளி நிலையத்திலும் மின்விளக்குகள் ஒளிமங்கச் செய்யப்பட்டு இந்த உலகளாவிய நிகழ்வில் பங்கேற்றன.இதுகுறித்து ஐ.நாவின் தலைமை செயலர் பான் கி மூன் கூறுகையில், எரிசக்தியை விரயமாக்காது பயன்படுத்துவதில் உலக மக்களின் பொறுப்புணர்வை இந்த Earth Hour அடையாளப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
குறிப்பாக அவுஸ்திரேலியாவிலுள்ள சிட்னி ஒப்பெரா ஹவுஸ், அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் பில்டிங், பிரான்ஸின் ஈபிள் கோபுரம் மற்றும் சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட பல இடங்கள் இந்த நிகழ்வில் பங்குபெற்றன.