

கொலிவுட் நாயகன் அஜீத் குமார், சமையல் செய்வதை தன்னுடைய பொழுதுபோக்காக வைத்துள்ளார்.அஜித்குமார் பிரியாணி செய்து படக்குழுவினரை அசத்துவதில் மிகவும் திறமையானவர்.படப்பிடிப்பிற்கு வரும் போது பிரியாணி செய்து கொண்டு வந்து அங்குள்ள இதர நடிகர், நடிகைகளுக்கு பரிமாறி அவர்களை மகிழ்விப்பார்.
மேலும் தன் குடும்பத்தினரோடு உணவு நிலையங்களுக்கு சென்றால் அங்கு தயாரிக்கப்படும் சுவை மிகுந்த உணவை வீட்டில் வந்து செய்து பார்ப்பார். உணவு தயாரிக்கும் போது ஏதேனும் சந்தேகம் வந்தால் உடனே அந்த உணவு நிலையத்திற்கு போன் செய்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வார்.
படப்பிடிப்பு முடிந்து வீட்டில் ஓய்வெடுக்கும் சமயங்களில் பல வகையான உணவுகளை சமைத்துப் பார்ப்பதை தல அஜித் தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார்.அவருடைய மனைவி ஷாலினி மகள் அனோஷ்காவை விதவிதமாக படமெடுத்து ஆல்பம் உருவாக்குவதை பொழுதுபோக்காக வைத்துள்ளார்.தற்போது அஜித்குமாரின் “பில்லா 2” திரைப்படம் மே இரண்டாம் வாரத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக வரவுள்ளது.