

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் ஏ பி டிவில்லியர்ஸ், ஜேக்கஸ் காலிஸ் முறையே முதல் இரு இடங்களில் உள்ளனர். மேற்கிந்திய தீவுகள் அணியின் சந்தர்பால் மூன்றாம் இடத்தில் உள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் 12வது இடத்திலும், 19வது இடத்தில் இருந்த அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பொண்டிங் 21வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின், பாகிஸ்தானின் அஜ்மல், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி இரு இன்னிங்ஸ்களிலும் தலா 5 விக்கெட் வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகளின் கேமர் ரோச் 16 இடங்கள் முன்னேறி 18-வது இடத்துக்கு வந்துள்ளார்.