

கனடாவில் வீட்டுவிலை குறித்து நடத்தப்பட்ட புதிய ஆய்வில் நிலையான பெருளாதார வளர்ச்சி மற்றும் குறைந்த வட்டி விகிதம் இருப்பதால் வீட்டு விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.இந்த நிலை எதிர்வரும் 2014ம் ஆண்டு வரை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.கிரெடிட் யூனியன் செண்ட்டர் ஆல் என்ற கடன் ஆய்வு நிறுவனம், பழைய வீடுகளின் விலை 3.4 சதவீதம் அதாவது 378,700 டொலர் வரை உயர்ந்துள்ளது என்று கூறுகிறது.
இன்னும் 4 சதவீதம் வரை வீட்டு விலை உயரலாம் என்கிறது. ஆண்டுதோறும் ஏற்படும் சராசரி வீட்டுவிலை உயர்வை விட 2013ம் அண்டில் வீட்டின் விலை 393000 டொலர் அதிகரிக்கலாம் என்றும் 2014ம் ஆண்டில் இவ்விலை 2.6 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.செண்ட்டர் ஆல் வெள்ளியன்று வெளியிட்ட தனது அறிக்கையில் ஒண்ட்டேரியோவில் திடீரென்று வீட்டுவிலை குறைய வாய்ப்பில்லை என்கிற அதிர்ச்சி தகவலை தெரிவித்தது.
வட்டிவீதம் அதிகரிக்கும் வாய்ப்பும் இல்லை, வீடுகளும் நிறைய விற்பனைக்கு வருகின்றன. இவையிரண்டும் சேர்ந்து வீட்டுவிலையின் உயர்வை அதிகரிக்கின்றன என்று தெரிவித்தது.இந்த ஆண்டு ஒண்டேரியோவில் 204,400 பழைய வீடுகள் விற்பனையாக வாய்ப்புள்ளது. இது முந்தைய கணிப்பை விட 5500 கூடுதலாகும். அடுத்த ஆண்டும் இந்த எண்ணிக்கை இன்னும் உயர்ந்து 207,200 வீடுகள் வரை விற்பனையாகலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
