பிரித்தானிய அரசி இரண்டாம் எலிசபெத் தனது 86வது பிறந்த தினத்தை குடும்பத்துடன் கொண்டாடினார்.ஹைட் பார்க்கிலும், லண்டன் டவரிலும் 41 பீரங்கிகள் முழங்கின. விண்ட்சர் கோட்டையில் அரச குடும்பத்தினர் அவருடன் எளிமையான நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருந்த போது பீரங்கிகள் முழுங்கியதால் பீதியடைந்த ஒரு குதிரை தறிகெட்டு ஓடியது. இதனால் நிகழ்ச்சி சில நிமிஷங்களுக்குத் தடைப்பட்டது.