இந்தோனேஷியாவின் கிழக்கு பிராந்தியத்தில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.6.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.இதனையடுத்து வீடுகள் மற்றும் கட்டங்களில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறியதாக இந்தோனேஷிய தேசிய அனரத்த நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து உடனடியாக தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை என அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.