

ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கமரூனின் 3 டி தொழில்நுட்பத்தில் உருவான டைட்டானிக் திரைப்படம் இந்தியாவில் வசூலில் சாதனை படைத்துள்ளது.டைட்டானிக் கப்பல் மூழ்கிய 100வது தினத்தை கொண்டாடும் வகையில் டைட்டானிக் 3டி படம் திரைக்கு வந்தது.இப்படத்தில் லியோனர்டா டி காப்ரியோ, கேத் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர்.
டைட்டானிக் படத்தின் பதிப்பை இந்தியன் பாக்ஸ் ஓபிஸ் நிறுவனம் வெளியிட்டது.இந்நிறுவனத்தின் இந்திய கிளைக்கு மட்டும் லாபமாக ரூ.18 கோடி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் டைட்டானிக் படத்தின் மூலமாக 2.1 பில்லியன் லாபமாக கிடைத்துள்ளது.இதற்கு முன்பு டைட்டானிக் திரைப்படம் 1997ம் ஆண்டு திரைக்கு வந்தபோது ரூ.55 கோடி லாபம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் உலக அளவில் வசூல் சாதனையில் டைட்டானிக் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ளது.ஜேம்ஸ் கமரூனின் இயக்கத்தில் வெளியான அவதார், 2.8 பில்லியன் டொலர்கள் சம்பாதித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.