

அணு ஆயுத திட்டம் குறித்து மே மாதம் 13, 14ம் திகதிகளில் சர்வதேச அணு சக்தி முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.ஈரான் இரகசியமாக அணு சோதனை நடத்துவதாக அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் கண்டனம் தெரிவித்ததுடன், பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்தன.ஈரானின் அணு சோதனை தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகமை(ஐ.ஏ.இ.ஏ) தூதர்களை அனுப்பி ஆய்வு செய்தது.
கடந்த 2011ஆம் ஆண்டு வரை ஈரான், தனது யுரேனியம் செறிவூட்டலை மூன்று மடங்கு(20 சதவிகிதம்) அதிகரித்துள்ளது என கடந்த மார்ச் மாதம் சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவர் யூகியா அமோனா தெரிவித்தார்.இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஈரான் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்துள்ளது.
சர்வதேச அணுசக்தி முகமையின் ஈரானுக்கான நிரந்தர பிரதிநிதி அலி அஸ்கர் சலோடினியாக் கூறுகையில், ஈரானின் அணு திட்டம் எரிசக்திக்காகத் தான், எனினும் இது குறித்து ஐ.ஏ.இ.ஏ.முன்னிலையில், சக்திமிக்க 6 நாடுகளான பிரிட்டன், சீனா, ரஷ்யா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜேர்மனியுடன் வரும் மே 13,14-ம் ஆகிய திகதிகளில் முதல்சுற்று பேச்சுவார்த்தை நடத்த ஈரான் முடிவு செய்துள்ளது.ஏற்கனவே கடந்த மாதம் துருக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். மே 23ம் திகதி ஈராக்கிடமும் பேச உள்ளோம் என்றார்.
