தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி அமெரிக்காவின் மிகச் சிறந்த கூட்டாளி என்று அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஹிலாரி கிளிண்டன் கூறியதாவது, பாகிஸ்தான் மக்கள் பிரதிநிதிகள் உண்மையானவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அதிகாரிகள் மட்டத்தில் அதை எதிர்பார்க்க இயலவில்லை.
பின்லேடன் பதுங்கி இருந்தது உயர்மட்ட அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தது என்பதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒருசிலருக்கு தெரிந்திருக்கலாம். அதையும் உறுதியாக நிரூபிக்க இயலாது என்று தெரிவித்தார்.
மேலும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அமெரிக்காவின் மிகச்சிறந்த கூட்டாளியாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஸர்தாரி திகழ்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.