முன்னாள் கிரிக்கட் வீரரும், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான முகமது அசாருதீன் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் மீது செக் மோசடி வழக்கு பதிவு செய்யப்படிருந்த நிலையில் அவ்வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத படி பிடியாணை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
இதன் மூலம் அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.