

புற்றுநோய்க்கான இரண்டாவது சுற்று சிகிச்சை முடிவடைந்துள்ளது, விரைவில் முழுமையாக குணமடைவேன் என இந்திய அணியின் கிரிக்கட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங்(வயது 30). இவரது நுரையீரலுக்கு இடையில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியின் காரணமாக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் புற்றுநோய் ஆய்வு மையத்தில் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை முடிவடைந்ததும் எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் தனது சிகிச்சை குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், இரண்டாம் நிலை கீமோதெரபி சிகிச்சை நேற்றுடன் முடிந்தது. இதனால் மிகவும் பலகீனமாக உள்ளது.
இருப்பினும் விரைவில் குணமடைந்து வரும் நான் மீண்டும் புத்துணர்ச்சியுடன் வருவேன் என்று உறுதியான நம்பிக்கை உள்ளது. இதுகுறித்து வரும் மார்ச் 7ம் திகதி ஸ்கேன் எடுக்கப்பட உள்ளது என்றார்.