கிரிக்கெட் வீரர் ருனாகோ மோடன், கார் விபத்தில் மரணம் அடைந்தார். வெஸ்ட் இண்டீசை சேர்ந்த சர்ச்சைக்குரிய வீரர் மோடன், 33. கடந்த 2002ல் அறிமுகமான இவர், 15 டெஸ்ட், 56 ஒருநாள் போட்டிகள், 7 "20-20' போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
ஐ.பி.எல்., தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். இவர், நேற்று உள்ளூர் போட்டியில் பங்கேற்று விட்டு காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மத்திய டிரினிடாட்டில் உள்ள சாலமன் ஹோச்சே நெடுஞ்சாலையில் செல்லும் போது, இவரது கார் விபத்துக்குள்ளானது.
இதில், சம்பவ இடத்திலேயே மோடன் மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு சக வீரர் கெய்ல் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.