

அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஸ்மார்ட் போன்களை ஒன்றிற்கு மேற்பட்ட நிறுவனங்கள் தயாரிக்கின்ற போதிலும் அவை தமக்கென்ற சில விஷேட அம்சங்களை இணைத்தே அறிமுகப்படுத்துகின்றன.அதற்கிணங்க Panasonic நிறுவனம் நீரில் நனைந்தாலும் பழுதடையாத தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளன.
Eluga என்ற பெயருடன் சந்தைக்கு வந்துள்ள இந்த போன்கள் அரோயிட்டின் 2.35ம் பதிப்பில் இயங்குகின்றன. எனினும் அன்ரோயிட் 4.0 பதிப்பிலும் இயங்கக்கூடியன. இவை 8 மெகா பிக்சல் கமெராவை கொண்டுள்ளதுடன் 8GB நினைவகத்தை கொண்டுள்ள போதிலும் அவை 32GB வரை நீடிக்கப்படக்கூடியன. இதன் திரையானது 5inch x 4.3 inch அளவிடையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் போனில் காணப்படும் மின்கலமானது 57 நிமிடங்களில் 80 வீதம் சார்ஜ் ஆக கூடியவை. இதன் ஆரம்ப பெறுமதி 399 யூரோவிற்கும் 449 யூரோவிற்கும் இடையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.