பாலிவுட் நட்சத்திர நாயகன் ஷாருக்கானிடம், லண்டன் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.பாலிவுட் நடிகர் ஷாருக்கான், யாஷ் சோப்ராவின் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் படம் குறித்த தகவல், புகைப்படம் போன்றவை வெளியாகி விடக் கூடாது என்று படக் குழுவினர் கவனமாக உள்ளனர். இதன் அடிப்படையில் பாதுகாப்பு கோரி லண்டன் பொலிஸாரை படக்குழுவினர் அணுகியுள்ளனர்.
இதையடுத்து லண்டன் பொலிஸார், படத்தின் நாயகன் ஷாருக்கான் என்பதால் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதற்கு முன்பு நியூயார்க் விமான நிலையத்தில் ஷாருக் கானை பல மணி நேரம் பொலிஸார் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.