சசிகலா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கனவிலும் நான் துரோகம் நினைத்ததில்லை.என்னுடைய உறவினர்கள்,நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத துரோகம்.
அவருக்கு துரோகம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எனக்கும் வேண்டாதவர்கள்தான்.அக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு,அவருக்குத் துரோகம் புரிந்தவர்களுடனான தொடர்புகளை நான் துண்டித்துவிட்டேன். அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும்,இனிமேல் அவர்களுடன் எனக்கு எவ்வித ஒட்டுமில்லை, உறவுமில்லை.எனக்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற ஆசையில்லை.ஜெயலலிதாவுக்கு உண்மையான தங்கையாகவே இருக்க விரும்புகிறேன். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.