ரோஸ் வோட்டரை பிரிஜ்ஜில் வைக்கவும்.அவ்வப்போது சிறிதளவு பஞ்சில் நனைத்து ரோஸ் வோட்டரில் நனைத்தெடுத்து, மூடிய கண்கள் மீது பத்து நிமிடம் வைத்திருங்கள், கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். இதே மாதிரி வெள்ளரிக்காய் சாறு,உருளைக்கிழங்குச் சாறு ஆகியவற்றையும் உபயோகப்படுத்தலாம். கண்கள் ஒளி பொருந்தியதாய் மாறும்.
சிறிதளவு ரோஸ் வோட்டரில் இரண்டு துளி விளக்கெண்ணெய் விடவும். கண்களை மூடிக்கொண்டு கண்களைச் சுற்றி பூசவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை அமைதியாக கண்களை மூடி படுத்திருக்கவும். பின்னர் வெது வெதுப்பான நீரில் கழுவ கண்கள் குளிர்ச்சியடையும். பளபளப்பாகவும் மாறும்.
ஒரு ஸ்பூன் நெல்லிக்கனி பவுடலை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சிறிதளவு தண்ணீரில் கரைத்து அதனை கண்களை மூடிய வாறு சுற்றி கழுவவும் கண்கள் புத்துணர்ச்சி அடையும்.