Mohamed Merah வினால் செய்யப்பட்ட கொலைகளின் காணொளிப் பிரதியொன்று Al Jazeera வின் பிரான்ஸ் தலைமையகத்திற்குக் கிடைத்துள்ளது.இப் பொதி Tour Montparnasse இலுள்ள Al Zazeera தலைமையகத்திற்குத் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.அதனுள் ஒரு Carte mémoire ம் கடிதமொன்றும் இருந்துள்ளது. இதை Al Jazeera திங்கட் கிழமை சட்டவியற் காவற்துறையினரிடம் வழங்கியுள்ளனர்.அவர்கள் அந்தக் காணொளிகள் உண்மையானவை என ஒப்பிட்டுக் கூறியுள்ளனர்.
இப் பொதியானது புதன்கிழமை தபால் மூலம் அனுப்பப்பட்டதை தபால் தலையிலுள்ள தபால் திகதி முத்திரை நிரூபிக்கின்றது. ஆனால் புதன் அதிகாலை 3 மணி முதலே Mohamed Merah வதிவிடம் அதிரடிப் படையினரால் முற்றுகையிடப்பட்டு விட்டது.
அப்படியானால் செவ்வாய் இரவே அதை அவசரமாக Mohamed Merah தபால் மூலம் அனுப்பியுள்ளாரா? அப்படியாயின் முற்றுகை நடக்கப்போவது தெரியுமா? அல்லது இன்னமும் வெளியிலுள்ள யாரோ இவரைச் சேர்ந்தவர்களால் புதன்கிழமை தபால் மூலம் அனுப்பப்பட்டதா என்பதே காவற் துறையினரின் இன்றைய வினாவாக உள்ளது.