கொலிவுட் நட்சத்திர நாயகர்களுள் ஒருவரான ஆர்யா, திரையுலகில் அதிகமான நாயகிகளுடன் இணைந்து பேசப்படுகிறார்.ஆர்யா, அமலா பால் இணைந்து நடித்த வேட்டை வெற்றி பெற்றது. இப்படத்திலிருந்து ஆர்யாவுக்கும் அமலாவுக்கும் காதல் இருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியானது.இந்த விடயத்தை ஆர்யாவும் அமலாவும் இணைந்தே மறுத்தனர்.
பின்பு ஆர்யா வீட்டு நிகழ்ச்சிக்கு நயன்தாரா வருகை தந்தது பற்றியும் காதல் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் ஆர்யா கூறியதாவது, என்னுடன் நடிக்கும் நாயகிகள் அனைவருடனும் என்னை இணைத்து பேசுகிறார்கள்.
பூஜா தொடங்கி இப்போது அமலா பால் வரை என்னை இணைத்து பேசுகிறார்கள்.எனக்கு அனைவருமே நண்பர்கள் தான். ஒருவர் மட்டும் மிகவும் நெருக்கம் என்று என்னால் தனித்தனியாக பிரிக்க முடியாது. என்னுடைய திருமணம் அனைவருக்கும் தெரிந்து தான் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.