

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் பணக்கார நாடாக கருதப்பட்ட ஜேர்மனியில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஜேர்மனியின் புள்ளிவிபரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 15.6 சதவீதம், அதாவது 13 மில்லியன் பேர் 2009ம் ஆண்டு முதல் ஏழைகளாகி வருவதாக சமீபத்திய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
ஆஸ்டிரியா, நெதர்லாந்து மற்றும் செக் குடியரசை விட இந்த ஏழைகளின் எண்ணிக்கை அதிகம் என்பதே வருத்தத்திற்குரிய விடயமாகும்.நாட்டின் சராசரி வருமானத்தை விட 60 சதவீதத்துக்கும் குறைவான வருமானம் படைத்தோர் ஏழைகளாக ஜேர்மனியில் கருதப்படுவர், அதாவது ஒருவரது வருமானம் 940 யூரோவுக்கும் குறைவாக இருந்தால் அவர் ஏழையாகக் கருதப்படுவார்.
இந்தக் கணக்குப்படி பார்த்தால் செக் குடியரசில் தான் மிகவும் குறைந்த ஏழ்மை விகிதம் காணப்படுகிறது. அதாவது 9 சதவீதம் ஆகும். மற்ற நாடுகளான நெதர்லாந்தில் 10 சதவீதமும், ஆஸ்திரியாவில் சுமார் 12 சதவீதமும் ஆகும்.