பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஷியா முஸ்லிம்கள் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் சென்று கொண்டிருந்த நான்கு பேருந்துகளை, அந்நாட்டு இராணுவ உடை அணிந்த சில துப்பாக்கித் தாரிகள் வழிமறித்துள்ளனர்.
பின்பு பயணிகளில் ஷியா இனத்தவர் 18 பேரை மட்டும் தனிமைப்படுத்தி சுட்டுக் கொன்றுள்ளனர். அந்தப் பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களின் அடையாள ஆவணங்களை சோதித்த பின்னரே, அந்த ஆயுததாரிகள் ஷியா இனத்தவரை மட்டும் சுட்டுகொன்றுள்ளது தெரியவந்தது.
கடந்த காலங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்ட இன மோதல்களின் போது, ஷியா இனத்தவர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளனர் என்றும், பாகிஸ்தான் அரசாங்கம் இப்படியான வன்முறைகளை தடுக்க சிறிதளவே நடவடிக்கைகளை எடுக்கின்றன எனவும் பிரித்தானியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.