கொப்பி ஒற்றையைக் கிழித்து பேப்பரில் ரொக்கட் செய்து பள்ளிக் கூடத்தில் விட்டது ஞாபகம் இருக்கின்றதா? இதே போல காகிதத்தில் செய்த ரொக்கட்டை விட்டு சாதனை படைத்துள்ளார் இளைஞர் ஒருவர்.கால்ப்பந்தாட்ட வீரரான Joe Ayoob என்பவரின் இடை விடாத முயற்சியே இதற்குக் காரணமாகும்.
இவர் கல்லூரியில் அடிக்கடி இவ்வாறு ரொக்கட் விடுவாராம்.. அதுவே தற்போது இந்த மகத்தான உலகசாதனை செய்வதற்கு வழி கோலியுள்ளது.இவர் ரொக்கட் விட்ட முழுத் தூரம் 226 அடிகளும் 10 இஞ்சிகளுமாகும்.முந்தைய சாதனையை விட இவரின் சாதனைத் தூரம் 19 அடியும் 6 இஞ்சிகளும் அதிகமாகும்.