சீனாவில் எலியின் மூலமாக பரவும் காய்ச்சலுக்கு 24 பேர் பலியாகி உள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷான்டாங் மாகாணத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் ஒருவித காய்ச்சல் பரவியது.இது எலியால் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த காய்ச்சலால் இதுவரை 938 பேர் பாதிக்கப்பட்டதில் 24 பேர் பலியாகி உள்ளனர்.இது 2010ம் ஆண்டை விட 1.88 சதவீதம் குறைவு.இதில் துறைமுக நகரான க்விங்டாவில் மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் எலி காய்ச்சலுக்கு 13 பேர் மட்டுமே பலியானது குறிப்பிடத்தக்கது.இந்த காய்ச்சலுக்கு பெரும்பாலும் கிராம மக்களே பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் வசிக்கும் பகுதியில் எலி நடமாட்டம் இருப்பதே இதற்குக் காரணம் என்றும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.