
பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்
சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்
பெண்களுக்காக
2011 இல் உலகில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்!


![]() |
ஜனவரி 1
எஸ்தோனியா நாடானது யூரோ நாணயத்தை முதன் முதலாக ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து 17வது நாடாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இணைந்தது.
ஜனவரி 9 - 15
தெற்கு சூடான் தன்னை ஒரு சுதந்திர நாடாக பிரகடனப்படுத்திக் கொள்ள வாக்கெடுப்பு நடத்தியது.
ஜனவரி 14
ஒருமாத கால போராட்டத்திற்கு பிறகு துனிஷியா நாட்டின் ஜனாதிபதி பதவி விலகினார்.
பெப்ரவரி 14
எகிப்து அதிபரை பதவியிலிருந்து விலக்க அமெரிக்காவின் புதிய திட்டம்: சுலைமானை இடைக்கால அதிபராக்க முடிவு
எகிப்து அதிபர் பதவியில் இருந்து முபாரக்கை வெளியேற்றி விட்டு சுலைமானை இடைக்கால அதிபராக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.எகிப்து அதிபராக ஹோஸ்னி முபாரக் கடந்த 30 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அவர் பதவி விலக வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நோபல் பரிசு பெற்ற மொகமது எல்பராடி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. போராட்டத்தில் இதுவரை 156 பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதற்கிடையே அதிபர் முபாரக் பதவி விலக போராட்டக்காரர்கள் நேற்று இறுதி கட்ட கெடு விதித்து இருந்தனர். போராட்டம் தீவிரமாக இருந்தும் பதவி விலக முபாரக் மறுத்து விட்டார்.
எனவே நேற்று மீண்டும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடைபெறும் தஹ்ரிர் சதுக்கத்தில் திரண்டனர். இதனால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. எகிப்தில் நடைபெறும் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து அனுமதி ஏற்படுத்த வலியுறுத்தி வருகின்றன. பல நாடுகளில் முபாராக்குக்கு எதிராக எகிப்து தூதரகத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதற்கிடையே எகிப்தில் அமைதியை நிலை நாட்ட அதிபர் முபாரக் உடனடியாக பதவி விலக வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. அதற்கு முன்னதாக முபாரக் அரசு போராட்டக்காரர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
போராட்டக்காரர்களை அடக்குவதில் இருந்து ராணுவம் விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் ஒபாமா அரசு எகிப்து தூதரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது. அமெரிக்க ராணுவ மந்திரி ராபர்ட் கேட்ஸ் எகிப்து ராணுவ மந்திரியை தொலைபேசியில் அழைத்து பேசினார்.
முபாரக் வெளியேறும் பட்சத்தில் தற்போது துணை அதிபராக இருக்கும் ஒமர் சுலைமான் தலைமையில் இடைக்கால அரசு அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எகிப்து போராட்டம் முடிவுற்ற நிலையில் ஏமனில் போராட்டம் தொடங்கியது
எகிப்து மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு 30 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிபர் ஹோஸ்னி முபாரக்கை பதவியை விட்டு தூக்கி எறிந்தனர்.மக்களின் போராட்டத்தால் 30 ஆண்டு கால அதிகார ஆட்சி முடிவு பெற்றது.இதன் தாக்கம் தற்போது ஏமன் நாட்டில் எதிரொலிக்கிறது.
ஏமன் நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர் சலேவ். இவருக்கு எதிராக மக்கள் போர்க்குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பெருந்திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் குதித்துள்ளனர். மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதனால் ஏமனில் பதட்டமான சூழல் நிலவுகிறது.
மார்ச் 11
ஜப்பானைத் தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை
அவுஸ்திரேலியா, தாய்லாந்து, நியூசிலாந்து, இந்தோனேஷியா, பப்பூவா நியூ கினியா மற்றும் ஹவாய் ஆகிய நாடுகளில் இன்னும் சிறிது நேரத்தில் சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும் சிலி, பெரு, மெக்சிகோ ஆகிய நாடுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா, ஒரிகன் மற்றும் அலஸ்கா மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சுமார் 32 அடி உயரத்திற்கு அங்கு சுனாமி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு அவசர காலநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் பல ஆசிய பசுபிக் வலய நாடுகளையும் சுனாமி தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டோக்கிய நகரில் சுமார் 400 000 பேருக்கான மின்னிணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேற்படி நில அதிர்வானது அண்மையில் நியூசிலாந்து கிரைஸ்ட் சர்ச்சில் ஏற்பட்டதை விட ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.
மார்ச் 17
லிபியாவில் மக்கள் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். லிபியாவின் இராணுவ வீரர்கள் அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்தனர். இதனால் ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு லிபியாவின் வான்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.
ஏப்ரல் 11
லோரன்ட் பக்போ கைது செய்யப்பட்டுள்ளார்
ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி லோரன்ட் பக்போ இன்று கிளர்ச்சிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஐவரி கோஸ்டில் கடந்த நவம்பரில் நடைபெற்ற தோ்தலின் போது எதிர்க்கட்சி வேட்பாளர் அவுட்டேரா வெற்றி பெற்றிருந்த போதும் பக்போ பதவி விலக மறுத்திருந்தார். ஆயினும் சர்வதேச சமூகம் அவுடேராவையே ஜனாதிபதியாக அங்கீகரித்திருந்தது.
அத்துடன் பக்போ பதவி விலக வேண்டுமென ஐ.நா. ஆதரவுடன் அவுட்டேராவின் படைகள் போராட்டம் நடாத்தி வந்தன. பக்போவின் படையினருக்கும் அவர்களுக்கும் மத்தியில் கடும் மோதல்கள் நடைபெற்றிருந்தன. அவ்வாறான நிலையிலேயே அபிட்ஜான் நகரிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் வைத்து பக்போ கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவா் பிரெஞ்சுப் படைகளாலேயே கைது செய்யப்பட்டு அவுடேராவின் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் அவர் அவுட்டேராவின் படைகளாலேயே கைது செய்யப்பட்டதாக பிரெஞ்சுத் தூதுவர் அறிவித்துள்ளார். பக்போ இழைத்துள்ள குற்றங்களுக்காக அவர் மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. தூதுவர் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 29
இன்று இளவரசர் வில்லியமின் திருமணம்
பிரித்தானிய இளவரசர் வில்லியம், கதே மிடில்டன் திருமணம் இன்று நடைபெறுகிறது. அரச குடும்பத் திருமணம் என்பதால் லண்டனே கோலகலமானது.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 அரச குடும்பத்துக்கும், சர்வதேச பிரபலங்கள் பலருக்கும் திருமணத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் லண்டனுக்கு வரத் தொடங்கி விட்டனர். பத்திரிகையாளர்களும், பத்திரிகை புகைப்படக்காரர்களும் ஏராளமானோர் வந்து குவிந்துள்ளனர்.
இதற்கு முன் வில்லியமின் பெற்றோர் சார்லஸ்- டயானா திருமணத்தை சுமார் 75 கோடி பேர் தொலைக்காட்சியில் பார்த்தனர். வில்லியமின் திருமணத்தை இதனைவிட அதிகமானோர் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இளவரசர் வில்லியமுக்கு வயது 28. கேட் மிடில்டனின் வயது 29. ஸ்கை நியூஸ், பி.பி.சி, குளோபல் நியூஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்கள் திருமண நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. திருமண நிகழ்ச்சிகளை பிரிட்டன் ராணி எலிசபெத் முறைப்படி தொடங்கி வைப்பார்.
இது காதல் திருமணமாகும். முன்னதாக கடந்த நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் நடைபெறும் நாளில் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் லண்டனுக்கு கூடுதலாக வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. லண்டனில் வெள்ளிக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
திருமணத்தின் போது மணமகள் கதே மிடில்டன் அணிவதற்காக நீலக்கல் பதிக்கப்பட்ட "ஹேர் பின்னை" இலங்கை பரிசாக அளித்துள்ளது. இலங்கை அரசு நிறுவனமான ஸ்ரீலங்கா நவரத்தினம், நகைகள் அமைப்பு இதனை வழங்கியுள்ளது. முன்னதாக 1981ஆம் ஆண்டில் டயானாவின் திருமணத்தின் போது இலங்கை அரசு அவருக்கு நீலக்கல் மோதிரத்தை அளித்தது.அதன் பின் அதேபோன்ற நீலக்கல் மோதிரத்தின் விற்பனை உச்சத்தை எட்டியது. இதையடுத்து இப்போதும் பிரிட்டன் அரச குடும்ப திருமணத்துக்கு பரிசளித்துள்ளது இலங்கை.
திருமணத்தை முன்னிட்டு லண்டனில் உள்ள தெருக்கள் அனைத்தும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பிரபல இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணத்துக்காக உலகம் முழுவதும் சுமார் 1900 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
மே 1
ஒசாமா கொல்லப்பட்டதை நேரடியாக பார்த்த ஒபாமா
அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்தவாரு நேரடியாகப் பார்வையிட்டுள்ளார்.இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பங்கேற்ற அமெரிக்க கடற்படை அதிரடி வீரர் ஒருவரின் தலைக்கவசத்தில் பொருத்தப்பட்டிருந்த வீடியோ கமெரா ஒன்றின் மூலம் இந்தக் காட்சிகள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டுள்ளன. முதலில் பின்லேடனின் தலையில் சுடப்பட்டுள்ளது.
அதுவே அவருக்கு மரணத்தை ஏற்படுத்திவிட்டது. இருந்தாலும் அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் அவரின் மார்பிலும் சுடப்பட்டுள்ளது.தலைக்கவசத்தில் கமெரா பொருத்தப்பட்ட படை வீரரே இரண்டாவது தடவையாக பின்லேடனைச் சுட்டுள்ளார். எனவே பின்லேடன் சுடப்படுவதை ஒபாமா நேரடியாகக் காணக் கூடியதாகவும் இருந்தது.
செய்மதி வழியாகவே இந்தக் காட்சிகள் வெள்ளை மாளிகைக்கு நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டன. பின்லேடனை பாதுகாக்க அவரின் மனைவியருள் ஒருவர் மனிதக் கேடயமாகச் செயற்பட்டுள்ள போதிலும் அது முடியவில்லை.அவரும் அமெரிக்கப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இந்தப் பெண் தவிர லேடனின் மகன் ஒருவர் உட்பட மூவர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
பராக் ஒபாமா, உப ஜனாதிபதி ஜோய் பிடன், வெளியுறவுச் செயலாளர் ஹிலரி கிளின்டன் உட்பட முக்கியப் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தக் காட்சிகளை வெள்ளை மாளிகையில் இருந்தவாரு நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.முதல் தரப் பயங்கரவாதத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதன் மூலம் உலகம் பாதுகாப்பான ஒரு இடமாக மாறியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ள போதிலும் பயங்கரவாதத்தின் ஒரு அத்தியாயம் மட்டுமே முடிவுக்கு வந்துள்ளதாகவும், தமது தலைவர் கொல்லப்பட்டமைக்காக நிச்சயம் பயங்கரவாதிகள் பழிவாங்கக் கூடும் என்றும் அமெரிக்கப் புலனாய்வுப் பணிப்பாளர் உட்பட இராணுவ ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.இறந்தவர் பின்லேடன் என்பதை அவரின் பல மனைவியருள் ஒருவரும் ஊர்ஜிதம் செய்துள்ளார்.
மே 26
8 ஆயிரம் பேரை கொன்று குவித்த அதிபர்: செர்பியாவில் கைது
ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா நாட்டை சேர்ந்த முன்னாள் அதிபர் ராட்கோ மிலாடிக். இவர் இரண்டாம் உலக போருக்கு பிறகு போஸ்னியாவில் பொதுமக்கள் மீது பல குற்றங்களை இழைத்து கொடுமைப்படுத்தினார்.இதனால் அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்கள். கடந்த 1992 முதல் 1995ம் ஆண்டு வரை சுமார் 8 ஆயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்தார். எனவே இவர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா. சபை குற்றம் சாட்டியது.
இவர் போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் தலைமறைவானார். கடந்த 16 ஆண்டுகளாக பல நாடுகளில் தலைமறைவாக இருந்தார்.இந்நிலையில் அவர் செர்பியாவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. எனவே அவரை கைது செய்ய வேண்டும் என சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வந்தன. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
இத்தகவலை செர்பியா அதிபர் போரிஸ் தாடிக் நேற்று அறிவித்தார். செர்பியாவின் பாதுகாப்பு உளவு நிறுவனம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர் செர்பியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
யூன் 4
சிலி நாட்டில் வெடிமலை வெடித்து சிதறியது. இதன் காரணமாக தென் அமெரிக்கா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா நாட்டில் விமானப் போக்குவரத்து தடைபட்டது.
யூன் 5
ஏமனில் மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்
ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே மருத்துவ சிகிச்சைக்காக நேற்று முன்தினம் சவுதி அரேபியா சென்றார்.அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக வந்த தகவல்களை அடுத்து மக்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் மூழ்கினர். சலேவுக்குப் பின் யார் அதிபராக வருவது என்ற அதிகாரப் போட்டி துவங்கும் பட்சத்தில் ஏமன் மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்படலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
யூலை 7
உலகில் முதன் முதலாக செயற்கை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
யூலை 9
தெற்கு சூடான் தனி நாடாக உதயமானது.
யூலை 20
வரலாற்றிலேயே முப்பது ஆண்டுகளில் இல்லாத வகையில் சோமாலியா நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.
யூலை 22
நோர்வேயில் குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டின் காரணமாக 76 பேர் கொல்லப்பட்டனர்.
ஓகஸ்ட் 5
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பது புகைப்படங்களின் மூலமாக நாசாவால் உறுதி செய்யப்பட்டது.
ஓகஸ்ட் 20 - 28
கடாபியின் சொந்த ஊர் சுற்றி வளைப்பு: புரட்சிப் படைகள் தீவிரம்
லிபியா அதிபர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக களத்தில் இறங்கியுள்ள மக்களின் புரட்சி படை சில நாட்களுக்கு முன்பு தலைநகர் திரிபோலியை கைப்பற்றியது.அதன் முலம் கடாபியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருந்தும் இன்னும் சில நகரங்கள் கடாபியின் ஆதரவு பெற்ற ராணுவம் வசம் உள்ளது.
எனவே அவற்றையும் கைப்பற்றும் முயற்சியில் புரட்சி படை தீவிரமாக உள்ளது. திரிபோலியை தொடர்ந்து பாப்கல்- அஷிசியா மற்றும் பின் ஜவா என்ற நகரையும் இவர்கள் கைப்பற்றியுள்ளனர்.தற்போது கடாபியின் சொந்த ஊரான சிர்த் நகரையும் தங்கள் வசமாக்க தீவிரமாக உள்ளனர். இதற்காக சிர்த் நகரை புரட்சி படை சுற்றி வளைத்துள்ளது.
செப்ரெம்பர் 19
பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 434 பேர் உயிரிழந்தனர்.
ஒக்டோபர் 18
1027 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஒக்டோபர் 20
மிக கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட கடாபி
கடந்த 69ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 42 ஆண்டுகள் வரையில் லிபியாவின் அதிபராக பதவிவகித்த கடாபி நேற்று புரட்சி படையினரால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டார்.பதுங்கு குழியில் பதுங்கி இருந்த அவரை உயிருடன் பிடித்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் கொடூரமாக கொலை செய்ததாக தெரிகிறது. இதற்கு ஆதாரமாக சில வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஒக்டோபர் 23
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்: 1000 பேர் பலி
துருக்கியின் தென்கிழக்கு மாகாணம் ஒன்றில் நேற்று நிகழ்ந்த 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒக்டோபர் 27
பிரஸ்ஸல்ஸ் மாநகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் யூரோ கடன் நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக ஐரோப்பிய நிலைத்த நிதி அமைப்புக்கான தொகையானது 1 டிரில்லியான உயர்த்தப்பட்டது.
ஒக்டோபர் 31
உலகத்தில் மொத்த மக்கள் தொகையானது 7 பில்லியனைத் தொட்டது.
டிசம்பர் 15
ஈரான் போர் முடிவடைந்தது என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டது.
டிசம்பர் 16
பிலிப்பைன்சில் வாஷி புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 1500 பேர் உயிரிழந்தனர்.
டிசம்பர் 19
வடகொரியா தலைவர் கிம் ஜாங் மரணம் அடைந்ததாக அரசு தொலைக்காட்சி தகவல் வெளியிட்டது.

மேலும் சில...
