Mambattiyan: Prasanth-Meera Jasmine; Watch Tamil Movie Online!
சனி, 31 டிசம்பர், 2011|
வெற்றி இணையம்
தன் அம்மா-அப்பாவை எரித்துக் கொன்ற பண்ணையார் உள்பட எட்டுப்பேரை போட்டுத் தள்ளிவிட்டு காட்டுக்குள் தலைமறைவாக இருந்து கொண்டே மலைவாழ் மக்களுக்கு உதவி செய்கிறான் மம்பட்டியான்.பிரசாந்தை இனிமேல் சொக்லேட் போய் என்று சொல்ல முடியாது. மதயானைபோல உடம்பை முறுக்கேற்றி படம் முழுக்க காட்டுக்குள் அலைந்து திரிகிறார்.
சண்டையில் தூள் கிளப்புகிறார்.போலீஸ் ஐ.ஜி.யாக வரும் பிரகாஷ்ராஜிடம் இரண்டு முறை நேரில் வந்து "உன்னால் என்னைப் பிடிக்க முடியாது. நீ செத்தா உன் குடும்பம் மட்டும்தான் அழும்.நான் செத்தா இந்த ஊரே அழும் என பஞ்ச் அடித்துவிட்டு சாமர்த்தியமாக பிரசாந்த தப்பிக்கும்போது தியேட்டரில் விசில் சப்தம்.
கவர்ச்சிக்கு முமைத்கான்.காதலுக்கு மீரா ஜாஸ்மின்.வழக்கம் போல தனி ஆளாக வந்து முமைத்கானிடம் ஜொள்ளு விட்டு நம்மை சிரிக்க வைக்கிறார் வடிவேலு.இடையே டம்மி மம்பட்டியானாக ரியாஸ்கானை கொண்டு வருவது நல்ல திருப்பம்.அதே டம்மி மம்பட்டியானை வைத்து பிரசாந்தின் கூட்டாளிகளை போலீஸ் போட்டுத் தள்ளுவதாக காட்டப்படும் காட்சிகளில் டைரக்டர் தியாகராஜன் கைதட்டல் போட வைக்கிறார்.
தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.ஒளிப்பதிவில் காடுகளின் சந்து பொந்துகளைக் காட்டி நம்மை சிலிர்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷாஜி குமார்.மம்பட்டியான் - மனதில் நிற்கிறான்.