உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி சஹாரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்பொழுது, இந்தியா ஒளிர்கிறது என்று பிரசாரம் செய்த பாரதீய ஜனதா மத்திய அரசு கொண்டு வந்த லோக்பால் மசோதாவுக்கு முட்டு கட்டையாக இருக்கிறது.h
இந்த மசோதாவுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் கிடைக்க விடாமல் பா.ஜனதா அதை தோற்கடித்து விட்டது.வலுவான லோக்பால் மசோதா நிறைவேறும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது.இந்த மசோதாவை நிறைவேற்றியே தீருவோம்.
லோக்பால் மசோதா எனது கனவு என்பதால் பா.ஜனதா அதை தோற்கடித்து விட்டது. ஆனால் அது என்னுடைய கனவு மட்டுமல்ல. ஒவ்வொரு இளைஞனின் கனவாகும் என்று கூறினார்.