

எதிர்வரும் 2012ஆம் ஆண்டு ஜேர்மானியருக்கு அதிக நம்பிக்கையை அளித்திருக்கிறது என்று சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இந்த விபரங்கள் பின்வருமாறு 49 சதவீத மக்கள் புத்தாண்டு குறித்த அச்சம் எதுவுமில்லை எனவும் 17 சதவீதம் பேர் இனி வரும் ஆண்டு எப்படி இருக்குமோ என்ற ஆர்வத்துடனும் இருப்பதாக தெரிவித்தனர்.
63 ஆண்டுகளாக இந்தக் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.இதில் இந்த ஆண்டு 56 சதவீதம் பேர் நம்பிக்கையோடு உற்சாகமாக இருக்கின்றனர்.ஜேர்மனியின் பிரபலமான எதிர்கால நிபுணரான மத்தியாஸ் ஹோர்க்ஸ் பொருளாதாரப் போக்குகள் குறித்தும் மனித நடத்தை குறித்தும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்.
எதிர்காலம் குறித்த அச்சம் மக்களிடம் காணப்படுவது இயற்கை தான்.ஏனெனில் நாம் காணும் கனவுகளைவிட நிஜம் வேறாக அமைந்து விடுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.யூரோ மண்டல கடன் நெருக்கடியால் ஜேர்மனி பாதிக்கப்படவில்லை.நவம்பர் மாதம் வேலையில்லாத் திண்டாட்டம் 6.4 சதவீதமாக இருந்தது. 2011ம் ஆண்டில் இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூன்று சதவீதத்தை எட்டியிருந்தது.எனவே தான் மொன்றியல் வங்கியின் சென்ற வார அறிக்கை, உலகின் பொருளாதாரச் சிறப்பு மிகுந்த ஏழு(G7) நாடுகளில் ஜேர்மனி முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
