தேசிய தாவரவியல் பூங்காக்களின் கூடாக இவ்வருடத்தில் 311 மில்லியன் ரூபா லாபம் ஈட்டப்பட்டுள்ளதென தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையால் இவ்வருடத்தில் தேசிய தாவரவியல் பூங்காக்களில் 230 மில்லியன் ரூபா லாபம் பெறப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சிரில் விஜேசுந்தர தெரிவித்தார்.
பேராதனை, ஹக்கல மற்றும் கம்பஹா ஆகிய தேசிய தாவரவியல் பூங்காக்களின் ஊடாக இந்த லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.2016ம் ஆண்டாகும்போது நாட்டில் மேலும் 10 புதிய தாவரவியல் பூங்காக்களை அமைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.மிரிஜ்ஜவில மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் தேசிய தாவரவியல் பூங்காக்களின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் கூறினார்.