சச்சின் இன் புதிய வீடு ரூ.100 கோடிக்கு இன்சூரன்ஸ்!
வெள்ளி, 30 டிசம்பர், 2011|
வெற்றி இணையம்
மும்பையில் சச்சின் கட்டியுள்ள புதிய வீடு ரூ. 100 கோடிக்கு "இன்சூரன்ஸ்' செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியின் "மாஸ்டர் பட்ஸ்மேன்" சச்சின். இவர் சமீபத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் 5 மாடி கொண்ட புதிய வீடு கட்டி குடியேறினார்.இந்த வீட்டை இரு பிரிவுகளாக பிரித்து சச்சின் இன்சூரன்ஸ் செய்துள்ளார்.
முதல் பிரிவு தீ விபத்து.அதாவது தீ பயங்கரவாத நடவடிக்கைகளால் பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு,குண்டு வெடிப்பு,திருட்டு உள்ளிட்டவைகள் ஏற்படும் பாதிப்புக்கு ரூ. 75 கோடிக்கு பொலிசி எடுத்துள்ளார்.
இரண்டாவதாக சச்சினின் கிரிக்கெட் உபகரணங்கள்,படங்கள்,கைக்கடிகாரங்கள்,பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் தவிர,வீடு அமைந்த நிலப்பகுதி,சுற்றுச் சுவர்,பாதுகாப்பு கருவிகளுக்காக ரூ. 25 கோடி என மொத்தம் ரூ. 100 கோடி வரைக்கும் "இன்சூரன்ஸ்' செய்திருப்பதாக தெரிகிறது.
இதற்கு சச்சின் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 40 முதல் 50 லட்சம் வரை பிரிமியம் தொகை செலுத்த வேண்டியிருக்கும்.இந்த இன்சூரன்ஸ் பிரிவில் சச்சின் இரண்டாவது தளத்தில் நிறுத்திவைத்திருக்கும் கார்களுக்கு கிடையாது. ஏனெனில் இந்தக்கார்களுக்கு தனியாக "இன்சூர்' செய்யப்பட்டுள்ளது.