
பல்சுவைச்செய்திகள்
கணணி செய்திகள்
கைத்தொலைபேசி தகவல்கள்
சினிமா செய்திகள்
மென்பொருள் தரவிறக்கம்
மருத்துவ செய்திகள்
பெண்களுக்காக
நாட்டின் பொருளாதார வெற்றி உழைக்கும் மக்களையே சாரும்: ஐனாதிபதி!


.jpg)
நாட்டின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வெற்றிக்கான எல்லா பெருமையும் வெற்றியின் பின்னால் உந்து சக்தியாக இருந்து செயற்படும் உழைக்கும் மக்களையே சாரும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உழைக்கும் மக்களின் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரி உள்ளிட்ட முக்கிய விடயங்களில் அரசு அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது, உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்களுடன் சேர்ந்து சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் இலங்கை உழைக்கும் மக்களுக்கு சகோதரத்துவத்துடன் வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.சர்வதேச தொழில் தாபனத்தின் உடன் படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும் முழுமையாக மதிக்கும் எமது தொழில் நியமங்கள், மற்றும் நடைமுறைகளுக்கு உலகலவில் கிடைத்துள்ள அங்கீகாரத்தை யிட்டு நாம் பெருமைப்படுகிறோம்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நாம் 8.3 வீதத்திற்கு வெற்றிகரமாக அதிகரித்துள்ளோம். இந்த அடைவுக்கான எல்லா பெருமையும் இந்த வெற்றியின் பின்னால் இருந்து ஊக்கச்சக்தியாக செயற்படும் எமது நாட்டின் உழைக்கும் மக்களையே சாரும். அந்த வகையில் சர்வதேச தொழிலாளர் தினத்தின் வெற்றிகர கொண் டாட்டங்களில் பங்குபற்றும் சந்தர்ப்பம் எமது உழைக்கும் மக்களுக்குக் கிட்டியுள்ளது.
தற்போது நாடு சரியான நிலையான அபிவிருத்திப் பாதையில் செல்கின்றது. கிராமங்களும் நகரங்களும் வேறுபாடுகளின்றி சுபீட்சத்தை நோக்கி விரைந்து முன்னேறி வருகின்றன. அதேபோல் விவசாய நிலங்களுக்கும் வேலைத் தளங்களுக்கும் முறையான தேவையான கவனத்தை அரசாங்கம் செலுத்தி வருகின்றது. உழைக்கும் மக்களின் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரி தொடர்பான தேவையான சட்டதிட்டங்கள் வரையப் பட்டுள்ளன.
அபிவிருத்தி இலக்கை அடைந்துகொள் வதற்காக அரசாங்கத்தின் முன்னேற்றகரமான கொள்கைகளின் பின்னால் வேறுபாடுகளை மறந்து அணிதிரண்டிருக்கும் எமது உழைக்கும் மக்களை நான் பெரிதும் மதிக்கின்றேன். இத்தகைய ஐக்கியம் நாட்டின் இறைமையை பாதுகாப்பதுடன் பொருளாதார வெற்றியையும் உறுதி செய்யும் என்பதை அவர்கள் மிகச் சரியாக விளங்கி வைத்துள்ளனர்.
மேலும், நாட்டில் நிலவிய மூன்று தசாப்த கால பயங்கரவாத சூழலின் காரணமாக வாழும் உரிமையை கூட இழந்திருந்த வடக்கு கிழக்கு மக்கள் சுதந்திரமாக மே தினத்தைக் கொண்டாடும் உரிமையை நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இலங்கையின் உழைக்கும் மக்கள் வடக்கு, கிழக்கு, தெற்கு என பிரிந்து நிற்காது அனைவரும் ஒரே தேசிய கொடியின் கீழ் நாட்டுக்காக ஒன்றிணைந் திருப்பதை உறுதி செய்வது எமது காலத்தின் பொறுப்பாகும்.
நாட்டையும் உழைக்கும் மக்களையும் அழிவில் தள்ளிவிட பல்வேறு சூழ்ச்சிகள் பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். குறுகிய அரசியல் நோக்கங்களையும் சந்தர்ப்பவாத சுய இலாபங்களையும் அடிப்படையாகக் கொண்ட அத்தகைய எல்லா சூழ்ச்சிகளையும் தோற்கடித்து எமது உழைக்கும் மக்கள் கடந்த காலங்களில் போன்று இன்றும் தமது ஐக்கியத்தையும் உரிமைகளையும் பாதுகாத்துப் பலப்படுத்துவர் என்பது எனது நம்பிக்கையாகும்.
இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் உழைக்கும் மக்களின் முன்னாள் தலைவர்களுக்கும் எமது தொழிலாளர்களின் கண்ணீருக்கும் வியர்வைக்கும் நாங்கள் வழங்கும் மிகச் சிறந்த நன்றி நாட்டினதும் மக்களினதும் சுபீட்சத்தை உறுதி செய்வதாகும் என நான் நம்புகின்றேன்.தேசிய ஐக்கியத்தைப் பாதுகாப்பதிலும் அபிவிருத்தியை அடைந்துகொள்வதிலும் எமக்கு முன்னால் உள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்கள் இதுவரையில் அரசாங்கத்திற்கு வழங்கிய ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும் என நான் நம்புகின்றேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி உழைக்கும் மக்களுக்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் வெற்றி கிட்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.
நன்றி :- தினகரன்
நன்றி :- தினகரன்


மேலும் சில...
